25 May 2017

Path to Prosperous Life - வளமான வாழ்வுக்கு வழி!!


வளமான வாழ்வுக்கு வழி!!


வளமான வாழ்வு அனைவருக்கும் இதமானது .வளமான வாழ்விற்காக இரவும் ,பகலும் உழைக்கின்றோம் .வாழ்வில் நிறைவும், நிம்மதியும் கிடைக்கின்றதா? எனில் கேள்விக்குறியே !

நூறு சத உத்திரவாதம் அளிக்கின்றார் வள்ளல் பெருமானார் .மனிதர்கள் விரும்பும் அனைத்து நலன்களும் கிடைப்பதாக உறுதி கூறுகிறார் .

மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறார்கள் .வளமான வாழ்க்கை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்று ஆர்வமாக ஓடுகிறார்கள் .இடைஇடையே ஒருவருக்கொருவர் ஆர்வத்துடன் வினவுகிறார்கள்.

 .நீர் உண்டு ,(காசு பணம் கொடாத நீர்) ,பொழிகின்ற கார் உண்டு ,(நிலத்தடிநீர் பிடிப்புள்ள நிலம்)  நிலத்தாலும் நீராலும் பலன் உண்டு , நிதிஉண்டு , துதிஉண்டு ,மதி உண்டு ,கதி கொண்ட நெறி உண்டு,நிலையுண்டு. ஊர் உண்டு, பணி உண்டு, மணி உண்டு, உடை உண்டு ,கொடையும் உண்டு, உண்டு உண்டு மகிழவே உணவுண்டு
சாந்தமுறும் உளம் உண்டு (உளைச்சல் இல்லாத மனம்),தேர் உண்டு( Luxury Sedan புற வழிச் சாலையில் சொகுசாக பயணிக்க  ), கரி உண்டு( யானை பெரிய தெருவில் செல்ல ) பரி உண்டு (குதிரை சிறிய தெருவில் செல்ல) விடுபட்டு போன அனைத்து செல்வங்களும் உண்டு.

எப்பொழுது ? எங்கே .....?இத்தனை வசதிகளும் என வினவுவார்க்கு, நின் பதத் தியானம் உண்டாகில் அரசே என சொல்கின்றார் வள்ளல் பெருமானார் .நாம்  எல்லாம் வல்லானை நெக்கு உருக, தியானம் செய்து அனைத்து நலன்களும் ,வளங்களும் பெறுவோம்.

No comments:

Post a Comment