31 August 2018

Navakkari - திருமூல தேவ நாயனார் அருளிச் செயத நலம் தரும் நவாக்கரி மந்திரம்


திருமூல தேவ நாயனார் அருளிச் செயத நலம் தரும் நவாக்கரி மந்திரம்


1.         க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் சிவயநம

2.         ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் சிவயநம

3.         ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம்  ஸ்ரீம் சிவயநம

4.         ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  சிவயநம

5.         கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் சிவயநம

6.         கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  சிவயநம

7.         ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் சிவயநம

8.         ஔம்   ஸௌம்  க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  சிவயநம

9.         ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   சிவயநம


மந்திர பலன்

முதல் மந்திரம்

க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் சிவயநம

பலன்

நலம் தரும். ஞானம் தரும். கல்வி தரும். வந்த வினையும், வருகின்ற வல் வினையும் போக்கும். தீவினை அண்டாமல் பாதுகாக்கும். இறை நிலையை நிறை நிலையாகப் பெற்றுத் தரும்!!


இரண்டாம் மந்திரம்

ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் சிவயநம

பலன்
கால காலனை வென்றிடலாம். என்றும் இளமையோடு இருக்கலாம். பெயர், புகழ் ஓங்கி வாழ்வாங்கு வாழலாம். பொன் , பொருள் அனைத்தும் பெறலாம். அமரர்கள்  வாழ்வும் அடையலாம்.


தெளிந்த ஞானமும் , செல்வமும் பெற்றிட
இந்தக் காணொளியில் இடம் பெற்றுள்ள மந்திரங்கள்


மூன்றாம் மந்திரம்

ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம்  ஸ்ரீம் சிவயநம


பலன்

எல்லோரையும் வசியம் செய்யும் மிகப் பெரும் ஆற்றல் பெறலாம். தேவாதி தேவர்களும், மன்னாதி மன்னர்களும் நம் வசம் ஆவார்கள். எதிரியை வெல்வது மிகவும் எளிதாகி விடும்.



நான்காம் மந்திரம் – நாவு அசைந்தால் , நாடு அசையும்

ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  சிவயநம

பலன்

வாஹீஸ்வரியை  நேராகக் கண்டு நாம் அனைத்து நலனையும் பெறலாம். வித்தை அனைத்தையும் கை வரப் பெறலாம்.

ஒவ்வொரு நாளும் புனிதமான நாளாக, மன நிறைவு உள்ள நாளாகக் கழியும்.

ஐந்தாம் மந்திரம்

கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் சிவயநம

பலன்

காமம்,  வெகுளி, மயக்கம் இவை மூன்றின் நாமம் கெட்டு , பிறவி வேர் அறுக்க வல்லது. தேவாதி தேவர்களும் வணங்கி வழிபடக் கூடிய பெரும்பேறு கிடைக்கும்.

ஆறாம் மந்திரம் – செல்வச் சிறப்பு பெற

கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  சிவயநம

பலன்

சிந்தை களிக்க , செல்வச் செழிப்புடன் வாழ


ஏழாம் மந்திரம்

ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் சிவயநம

பலன்

பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வல்லது. கண்ணுக்குள்ளும் , உடலுக்குள்ளும் யோக நிலையில் அனுபவிக்கக் கூடிய  அனுபவத்தைத் தர வல்லது.

சுவை ,ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை ஐந்தின் வகையைத் தெரிந்து வாழ வைப்பது.

எட்டாம்  மந்திரம்

ஔம்   ஸௌம்  க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  சிவயநம


பலன்

மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை யோக நிலை அனுபவங்கள் அனைத்தும் பெறுவதற்கான மந்திரம். .

என்றும் இளமையோடு இருக்க ,  நன்றே  தரும்  ஞான மாமருந்து.

ஒன்பதாம் மந்திரம்

ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   சிவயநம
,
பலன்

தானே சிவமாக விளங்கும் ஒரு அரும் பெரு நிலையை அடையலாம்.
 நம் உடலிலும் , உயிர் உணர்விலும் இறை ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ளும் அருட் பெரும் மந்திரம் இது.

14 August 2018

Gurukul - குருகுலம்


குருகுலம்

குருகுலத்தில் நிறைய மாணவர்கள் பாடம் பயின்றனர்.  இல்லற தர்மத்தை ஏற்கப்போகும் சீடர்கள்;  துறவற தர்மத்தை ஏற்கப்போகும் சீடர்கள் என்று சீடர்கள் பல வகைகளில் பிரிக்கப்பட்டு அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு அவரவர்களுக்குப் பாடபோதனை செய்தார் குருநாதர்.  துறவு மேற்கொள்ளும் சீடர்கள் வி~யத்தில் மிகவும் கவனம் செலுத்தினார் குருநாதர்.


     துறவு என்பது மிகவும் புனிதமானது. யாருடைய நிர்பந்தத்திற்காகவும் துறவை நாம் மேற்கொள்ளக்கூடாது. குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகவோ , சோம்பல் காரணமாகவோ  ஒருவன் துறவு மேற்கொள்ளக்கூடாது.  இயலாமை காரணமாகவோ , நோய்வாய்ப்பட்டோ இருக்கும் நிலையினில் தோன்றும் சலிப்புத் தன்மையை துறவு என்று கருதக்கூடாது.  துறவு என்பது ஒரு புனிதமான வாழ்க்கை நெறி.  அதனால் துறவு மார்க்கம் செல்ல விரும்பும் சீடர்கள் தனது சொந்த பெற்றோர் , சொந்த சகோதரர் ,  சகோதரி இவர்களிடம் கூட நெருக்கம் வைத்துக்கொள்ளக் கூடாது. 

     எந்த நேரத்தில் உணர்ச்சிகள் நம்மை எவ்வாறு அலைக்கழிக்கும் என்று கூறமுடியாது எனத் தான் உணர்ந்ததை தனது சீடர்களுக்கு உணர்த்திப் பாடம் நடத்தினார் குருநாதர். துறவு மேற்கொள்ளும் சீடர்கள் உடல் அளவில் மட்டுமல்லாது மனத்தளவிலும் துறவு நிலையில் வாழவேண்டும் என்று அறிவுரை கூறினார் குருநாதர்.  தினமும் ஒவ்வொரு அடியவர்கள் கதையை மேற்கோள்காட்டி பாடம் நடத்தினார்.


     குருகுலத்தில் பாடம் நிறைவுபெற்றது.  இறைஉணர்வுடன்  இருக்கும்படியும்; வெளிமுகச் சிந்தனைகளில் மனத்தை அலைக்கழிக்க வேண்டாம் என்றும் சீடர்களைக் குருநாதர் கேட்டுக்கொண்டார். தீவிர பக்தியும் , இறைஉணர்வு பெறுவதில் வேட்கையுமுடைய சீடர்கள் அனைவரும் மிகுந்த பயத்துடன் குருவின் திருவடி பணிந்து நாங்கள் தவறு செய்யாமல் திருத்திப் பணிகொள்ள வேண்டியது தங்களது கடமை என்று குருவிடம் சரணாகதி அடைந்து விடைபெற்றுக் கொண்டார்கள்.  அவர் அவர்கள் தனித்தனியாகச் சென்று தங்களது பயிற்சியைத் துவங்கினார்கள்.  ஒரே ஒரு சீடன் மட்டும் இவர்கள் தேவை இல்லாமல் கவலைப் படுகிறார்கள். எனக்கு என்மீது நம்பிக்கை உள்ளது. சாதனை செய்யும் சாதகர்கள் சொந்தத் தாய் தந்தையரிடமும் , சகோதர சகோதரியிடமும் இனக்கவர்ச்சி காரணமாக விலகி இருக்கவேண்டும் என்று கூறுவது மிகவும் தவறு.  தேவை இல்லாமல் குருநாதர் தானும் பயந்து , சீடர்களையும் பயப்பட வைக்கின்றார் என்று நினைத்தான்.  அதை தனது சக சீடர்களிடமும் தனது குருநாதரிடமும் கூறினான்.  பிறகு தானும் தனது பயிற்சியை மேற்கொள்ள தனி இடம் அமைத்துச் சென்றுவிட்டான்.  எல்லாச் சீடர்களும் தனது பயிற்சிகளை எல்லாம் வழக்கம்போல் செய்து வந்தனர்.  அவ்வப்போது குருதேவரிடம் சென்று சந்தேகம் கேட்டு ஆசி பெற்றும் வந்தனர். 

     தேவை இல்லாமல் பயப்படக்கூடாது என்று கூறிய சீடனும் தனது பயிற்சியைச் செவ்வனே செய்துவந்தான்.  ஒருநாள் அவன் பயிற்சி முடித்து தனது குடிலுக்குள் வந்தான் மழைபிடித்துக்கொண்டது. மிகவும் பலத்த மழை.  வெளியில் நின்று மழை பெய்வதை ரசனையுடன் பார்த்தான். இறைவன் ஒவ்வொரு உயிர்களிடம் காட்டும் கருணை எவ்வளவு புனிதமானது.  அதை நாம் யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்றவாறு சிந்தித்தான்.  பின் தனது குடிலிற்குள் வந்து தியானம் செய்தான்.  சற்றுநேரம் கழிந்தது.  சீடன் தியானம் கலைந்து வெளியே வந்தான். 

     வெளியில் தனது தவக்குடிலிற்கு அருகில் ஒரு மாது மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றான்;. பெண்ணே மழை பெய்கின்றது  உள்ளே வா என்று அழைத்தான். பெண் வர மறுத்தாள். ஆபத்திற்குப் பாவமில்லை.  துறவுநிலை மேற்கொள்ளும் சாதகன் வசிக்கும் தனி அறைக்கு பெண்கள் நுழையக்கூடாதுதான். ஆனால் அவசியம் ஏற்பட்டால் அதனால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என்று சீடன் கூறினான். அந்தப் பெண் மிகவும் தயக்கத்துடன் உள்ளே சென்றாள். மீண்டும் மழை பிடித்துக்கொண்டது. ஈரத்துணியில் அந்தப்பெண் நடுங்கிக் கொண்டிருந்தாள். சீடன் மிகவும் இரக்கப்பட்டான்.  குளிர்காய்வதற்காகச் சில சுள்ளிகளைப் போட்டு நெருப்பு மூட்டிக் கொடுத்தான்.  மீண்டும் மழையை வேடிக்கை பார்க்கக் குடில் வாசலுக்கு வந்துவிட்டான்.


     குளிரால் பாதிக்கப்பட்ட பெண் நெருப்பு காய்ந்ததும் , தனது புடவையை எடுத்து நெருப்பு வெம்மையில் சூடேற்றினாள்.  தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான் சீடன்.  ஒரு பெண் தன் கண் எதிரே சேலையை உலர்த்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஒரு கணநேரத்தில் நிலைதடுமாறி மனம் குலைந்தான்.  வேகமாக ஓடிச்சென்று அந்தப் பெண்மணியைக் கட்டி அணைக்க மனத்தளவில் ஓடிவிட்டான்.


     குருநாதரின் உபதேசம் காதில் விழுந்தது.  எத்தனை முறை குருநாதர் படித்துப் படித்துக் கூறினார். ஒரு கணநேரத்தில் நம்மை இழந்துவிட்டோமே!  எத்தனை அறியாமை! குருவை நினைத்து அழுதான்;. தனது பாவத்திற்குப் பிராயச்சித்தம் என்ன? என்பது பற்றிச் சிந்தித்தான். குருநாதர் இவன்;முன் தோன்றினார். காமம் கடத்தற்கு அரியது. அதனால்தான் ஆத்ம சாதகர்களை உடன் பிறப்புகளிடம் இருந்தும்ää பெற்றோரிடமிருந்தும் சில அடிகள் இடைவெளி விட்டுப் பழகும்படி அருளாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இதுபற்றிக் கவலைப்படாமல் எச்சரிக்கை உணர்வுடன் உனது சாதனைகளை மீண்டும் செய்துவா என்று பணித்தார்.

6 August 2018

உணா்வு பேசும் சேவை - Thirunavukkarasar's Satyagraha

உணா்வு பேசும் சேவை


திருவாவடுதுறையிலிருந்து திருநாவுக்கரசர் பழையாறை சென்றார்.  பழையாறையில் உள்ள சிவன்கோவிலை மறைத்து சமணர்கள் கோவில் கட்டியுள்ளதாக ஊர்மக்கள் கூறினார்கள்.

நம்பும் என் சிந்தை நணுகும் வண்ணம் தன்;பொருட்டு இறைவன் செய்த திருக்கருணையை திருநாவுக்கரசர் நன்கு உணர்ந்திருந்தார்ஆனால் தோன்றி மறையும் அதிசயத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் எக்காலத்திலும் இருப்பார்கள் என்பதை திருநாவுக்கரசர் அறிந்தே வைத்திருந்தார்.  இங்கு இருந்த சிவன் கோவிலை சமணர்கள் மறைத்து விட்டனர்எங்கள் ஊருக்கும் இறைவன் ஒரு அதிசயம் நடத்தட்டுமே என நினைத்தார்கள் மக்கள்.



     சமணர்கள் கோவிலாக இருந்தாலும், சைவர்கள் கோவிலாக இருந்தாலும், இறையாற்றல் என்பது ஒன்றே ஒன்றுதான்.  இறைவன் பலவாக இருக்கமுடியாது.  இறைவனிடமிருந்து வரும் ஒளிக்கற்றைகளைத் தடுத்துத் தங்கள் பக்கம் மறைத்துக் கொள்வதற்கு ,  இந்த ஒளிக்கற்றைகள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்துள்ள மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒளிக்கற்றைகள் அல்லவேஒளிக்கற்றைகள் மொபைல் சர்வீஸில் மிகப்பெரிய பங்கு வகிப்பதால் , புதிய யுக்திகளைப் பயன்படுத்தும் நிறுவனம் தங்கள் சேவைமூலம் உலகப் புகழும், பொருளாதார மேம்பாடும் அடையவேண்டி ஒளிக்கற்றைகளை அளவுக்கு அதிகமாக தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்கின்றனபிறகு ஒளிக்கற்றைகளை அளவிற்கு அதிகமாக வைத்திருப்பவர்களிடமிருந்து பிற நிறுவனங்களும் , அரசு அதிகாரிகளும் கையகப்படுத்துவார்கள்.

     பரம்பொருளின் ஒளிக்கற்றையினை அப்படி யாராவது சுயநல நோக்கோடு தக்கவைத்துக் கொள்ளமுடியுமாஅப்படி தக்க வைத்துக்கொண்டால் , இறைவனது பேரண்ட ஆற்றலின் விரிந்து பரந்துபட்ட தனித்தன்மைக்குக் களங்கம் கற்பிப்பதாகும்பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்த இந்தப் படர் ஒளிப்பரப்பு, கைபேசி சேவையில் பயன்படக்கூடியது அல்லவே.   

     மனம் பேசும் சேவையிலும், உயிர் பேசும் சேவையிலும், உணர்வுகள் பேசும் சேவையிலும் பயன்படக்கூடியது செம்பொற்சோதிபிரமிப்பூட்டும் மனிதப் படைப்புகள் செய்யும் அற்புதங்கள் அனந்தம் கோடிஆனால் அந்த மனிதனையும் அவனது அறிவுத் திறனையும் படைக்கக் கூடியவன் இறைவன் மட்டுமேவிஞ்ஞான வளர்ச்சி எத்தனை வேகமாக வளர்ந்தாலும் அந்த விஞ்ஞானத்தால் ஒரு உயிர் அணுவை உற்பத்தி செய்யமுடியாதுஒரு சொட்டு செயற்கை இரத்தத்தையும் உற்பத்தி செய்யமுடியாது.  மனமும் உணர்வுகளும் தொழிற்பட்டு தலைநிற்கும் அன்பர்களுக்கு அருள் அளிக்கும் தேசவிளக்கு இறைவன் என்பதனை நாவரசர் தன் அனுபவத்தில் உணர்ந்தார்.


      
சத்தியாக்கிரகம்

சமணர்கள் பழையாறை வடதளியில் சிவபெருமானை மறைத்து விட்டார்கள் என்பதால் அவர் திருவுருக்கண்டு செல்லவேண்டும் என்று அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்தார் அப்பர் சுவாமிகள்தன்னுடைய குழந்தை பசியால் வாடுவது கண்டு பொறுக்காத பரமன் மகேந்திரபல்லவன் கனவில் தோன்றி பழையாறை வடதளியில் உள்ள கோவிலைத் திறக்கச் செய்தார்.

தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
 நிலையினால் மறைத்தான் மறைக்க ஒண்ணுமோ
 அலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினான்அடியேநினைந்து உய்ம்மினே
                                                                                                                          (
திருமுறை 5)

     தலைமுடியினைத் திருத்தம் செய்வதற்குரிய கருவிகளைப் பயன்படுத்தினால் கூட அதனால் சில உயிர்கள் வதைபடலாம் என்னும் எண்ணத்தில், தலையில் உள்ள மயிர்களைக் கருவிகள் கொண்டு சுத்தம் செய்வதில்லை சமணர்கள்.  ஆனால் அப்படி ஒரு உயிருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது என்னும் கொள்கை உடைய சமணர்கள், இப்படி பழி பாவத்திற்கு அஞ்சாமல், சமயத்தின் பெயரால் கொலை செய்கிறார்களேஎன்று மனம் வருந்தினார் திருநாவுக்கரசர்.  அன்பினால் இறைவனைக் கட்டலாமே தவிர, வேறு எதனாலும் அவனை மறைக்க முடியாதேஎன்று நினைத்தார்இறைவனும் மகேந்திரபல்லவன்மூலமாக திருநாவுக்கரசருக்குப் பழையாறை வடதளியில் காட்சி கொடுத்தான்.


பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
 படர்ந்ததோர் படரஒளிப்பரப்பு
                                                                                                                         (
திருவாசகம்)




     அண்ட ஆற்றல் முழுவதிலும் பரவியுள்ள ஒளிக்கற்றைகளை யாரும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவோ மூடி மறைத்துக்கொள்ளவோ செய்ய முடியாது என்பது திருநாவுக்கரசருக்கும் நன்றாகத் தெரியும் அவ்வூர் மக்கள் விரும்பியபடி இறைவனைப் பழையாறை வடதளியில் கண்டு வணங்கினர்.