10 January 2018

Who is a Guru ? குருவின் இலக்கணம்

குருவின் இலக்கணம்

                குரு என்றவுடன் நம் எல்லோர் மனக்கண்ணிலும் ஒரு வரைபடம் நிழலாடும். தாடி, மீசையுடன், தண்ட கமண்டலமுடன், காவி உடையுடன், கழுத்தில் உருத்திராக்கம் அல்லது துளசி மணி மாலை, நெற்றியில் விபூதி அல்லது ஊர்த்துவ புண்டரம் சகிதமாக நம் கண்முன் ஒரு வரைபடம் ஓடும். இத்தனை சகிதமாக இருந்தால்தான் குருவாபுறத்தோற்றத்தைக் கொண்டு நாம் ஒரு குருவிற்கு அளவுகோல் நிர்ணயம் செய்யலாமாஎன்று நமக்குச் சிந்திக்கத் தோன்றுகின்றதுகுரு என்றால் யார்நம்மிடம் உள்ள குற்றங்களை எல்லாம் களைபவர்தான் குருகுரு என்பவர் நம்மை நாமாகச் செய்பவர்.


                குருநாதர் என்பவரைப் புறத்தோற்றம் எதனாலும் நாம் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாதுகுருநாதர் என்பவரை அடையாளம் காட்டுவது நமது மனமும் உணர்வுகளும்தான் என்று கூறுகிறார் தாயுமானவ சுவாமிகள்யாருடைய அருகில் இருந்தால் நமது மனமும், உடலும் சாந்தமாக இருக்குமோ யாரை நினைத்த பொழுது,  நம் மனக்குழப்பம் தெளிவடையுமோ யாரை நினைத்த பொழுது நம் மனம் அலை பாயாமல் நிலை நிற்குமோ யாரைக் கண்ட பொழுது, நம்மை அறியாமல் நம் மனத்தில் ஒரு அமைதி தோன்றுமோ அவர்கள்தான் ஒரு உயிருக்கு நன்மை அளிக்கும், வழிகாட்டும் சத்குருவாவார். குருவின் சந்நிதானத்தில் என்ன என்ன அற்புதங்கள் நடைபெறும் என்பதனை தாயுமானவ சுவாமிகள் கூறுகின்றார்.


                புலியும் பசுவும் ஒன்றுக்கொன்று பகையான விலங்குகள்குருவின் அருகில் ஒன்றுக்கொன்று பகையான விலங்கினங்கள் கூடத் தன் பகையை மறந்து அன்பு பாராட்டி நட்போடு செயல்படும். பகைவர்கள் என்பவர்கள் வெளியிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல. அரசியல் தகராறு, சொத்துத் தகராறு, கருத்து வேறுபாட்டால் தகராறு, நான் எனது என்னும் ஆணவத்தால் தகராறு என்று பகைமை பலதரப்படும். இவைகள் எல்லாம் புறப் பகைவர்கள் என்பார் வள்ளல் பெருமானார்அகப் பகை என்பது பற்றி நாம் இதுவரை சிந்திக்கவில்லைநம்மைச் சிந்திக்க வைக்கின்றார் பெருமானார். காமவுட் பகைவனும், கோப வெங்கொடியனும் என்று உட்பகையாகிய அகப்பகையைச் சுட்டிக் காட்டுகின்றார்.


                ஒரு குருவின் அருகில் இருக்கும்போது, புறப்பகைவர்கள் மட்டுமல்ல,  அகப்பகையாகிய காமம், லோபம், மதம், மாற்சரியம் இவைகள் அனைத்தும் நீங்கி மன அமைதி பெறும் என்று தாயுமானவர் கூறுகிறார். மத யானை என்பது ஆணவத்தின் சின்னம். மதம் பிடித்த யானை கூட குருவின் ஆணைக்குக் கட்டுப்பட்டு கட்டை ஏந்தி வரும்காமதேனு என்பது  நினைத்தது எல்லாம் தரும்அக் காமதேனுவும் குருவின் திருவடியில் வணங்கி என்ன தேவை என்பதை எடுத்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்ளும்அது மட்டுமல்ல, முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தர்களும், நாற்பத்து எட்டாயிரம் மகரிஷிகளும் சத்குருநாதரின் திருவடிப் பேற்றினை விரும்பி ஏற்றுக்கொண்டு அவர்களும், புவிராஜர், கவிராஜர், தவராஜர் ஜெய ஜெய போற்றி என்று வணங்குகின்றார்கள். வானகமும், வையகமும் குருவின் திருச்சந்நிதியில் வந்து சேவை செய்யும்இதுதான் ஒரு குருவின் இலக்கணம் என்கிறார் தாயுமானவ சுவாமிகள்.


                குரு அருகே இருக்கும்போது மட்டுமல்ல. குருவை நினைத்தாலும், குரு கூறிய அறிவுரைகளைக் கேட்டாலும், குருவின் திருமேனியைத் தரிசனம் செய்தாலும், ஒவ்வொரு உயிரையும் நிறைவான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் இயல்புடையது குருநாதரின் தன்மை


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
 தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
 தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
 தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே                                                                                                                                                                                                                                                                                                                                                  (திருமூலர்)

3 comments:

  1. அருமையான விளக்கம் அம்மா.எளியச் சொற்றொடர் மூலம் விளக்கி உள்ளீர்கள்.நன்றி அம்மா
    குருவே தெய்வம்.

    ReplyDelete
  2. மிக மிக அருமையான விளக்கம்.... உங்கள் உத்தரவுடன் என் Facebook நண்பர்களுக்கு பகிறுகிறேன்

    ReplyDelete