19 October 2019

போதமும் கடந்த போதம்



போதமும் கடந்த போதம்


அப்பைய தீட்சிதர் என்னும் மகான் இருந்தார். அவர் அல்லும் பகலும் சிவநாமத்தையே கூறிக்கொண்டிருந்தார். சிவநாமம் அவரது ஊனிலும் , உணர்விலும் கலந்து நிறைந்து நின்றது. மகான்கள் வாழ்ந்தபோது அவர்களை விமர்சனம் செய்யும் கூட்டமும் சேர்ந்தே வரும் என்பதனை ஒவ்வொரு அடியவர்கள் வாழக்கைச் சரித்திரமும் கூறுகின்றது. அப்பைய தீட்சிதர் ஒன்றும் சிவனடியார் அல்ல என்றும்; ஊரார் தம்மைச் சிவனடியார் என்று பெருமையாக நினைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அப்பைய தீட்சிதர் யாரைக் கண்டாலும் சிவாயநம என்று கூறுகின்றார் என ஒரு சிலர் கூறினர்


     தீட்சிதர் தனது சீடர்களிடம் ,ஊமத்தைச் சாற்றைக் குடித்துத் தற்போதம் இழந்தநிலையில் எனது மனமும்உணர்வும் சிவநாமம் சொல்கின்றதா? என்று அறிய ஆவலாக உள்ளதுநான் ஊமத்தைச் சாறு குடித்தபிறகு என்ன செய்கின்றேன் என்பதனை அறிவதற்கு எனக்குச் சுயநினைவு இருக்காதுஅதனால் நீங்கள் நான் செய்வதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்மீண்டும் சுயஉணர்வு வரும்போது என்னிடம் கூறுங்கள் என்றார். சீடர்கள் இது என்ன விஷப்பரீட்சை என்று பயந்தனர். ஆனாலும் குருநாதரின் ஆணைக்குப் பணிந்து அவ்வாறே செய்வதாகக் கூறினர்குருநாதரும் ஊமத்தைச் சாற்றைக் குடித்தார்


     போதமாய் ஆதி நடு அந்தமும் இல்லாத ஆனந்த நிலையில் நின்று நூறு பாடல்கள் பாடினார். சீடர்கள் அப்பைய தீட்சிதரின் பாடல்களைக் குறித்துக் கொண்டார்கள்.



தானஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே
 வான் ஆதிமாயை வழங்காதோ
                                      (தாயுமானவர்)



     என்று வான் ஆதி மாயை கடந்த நிலையில் அப்பைய தீட்சிதரின் பாடல்கள் விளங்கின. அப்பைய தீட்சிதரும் கலங்கிய மனநிலை தெளிந்தபிறகு அந்தப் பாடல்களைப் படித்தார். 

     என்னை உன்னை இன்னது என்னாமல் நிற்கும்நிலை. தன்னை ஈசன் தனக்கு அருளிய திறத்தை நினைத்துப் பார்த்து வியக்கின்றார்.