13 May 2017

திருமந்திரம்



திருமந்திரம்


திருமந்திர மாலை என்னும் திருமந்திரம் திருமூல நாயனாரால் இயற்றப்பட்டது. இது ஒரு சிறந்த வாழ்க்கை நூல். வாழ்க்கைக்கான சீரிய அறங்கள் இங்கு கூறப்படுகின்றன. கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை, கள்ளுண்ணாமை, அன்புடைமை, கல்வி ,கேள்வி, கேட்டு அமைதல் போன்ற பல அறங்கள் இந் நூலில் பேசப்படுகின்றன. 
மேலும் இந்திரியங்களை அடக்கும் முறை பற்றியும் இந் நூலில் திருமூலர் விளக்குகின்றார்.   இந்திரியங்களை அடக்கும் முறை பற்றி மிக அற்புதமான ஒரு கருத்தைக் கூறுகிறார். 


“ அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
 அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
 அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
 அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.”
 

                      ( திருமந்திரம் ஏழாம் தந்திரம் பாடல் 33 )


மடை மாற்றம் செய்யப்பட்ட பொறிகளும், புலன்களும் உலகியலில் இருந்து இறை உணர்வைப் பெறுவதற்கு பயன்பட வேண்டுமே ஒழிய, உயிரற்ற ஜடப் பொருட்கள் மாதிரி அவை இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்னும் புரட்சிகரமான ஒரு சிந்தனையைப் பதிவிட்டுள்ளார் திருமூலர். 

“அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை” என்பது ஆணித்தரமான கருத்து. நமது பொறிகளும், புலன்களும் பேரண்ட நாயகனை நோக்கி திசை திரும்ப வேண்டுமே தவிர, நாம் உயிரற்ற பொருள் போல் இருக்கக் கூடாது என்னும்  சிந்தனையை விதைத்தவர் திருமூல தேவ நாயனார். இதனையே 


“சிந்தனை நின் தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி,
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி...”


                     ( திருவாசகம் - திருச்சசதகம் பாடல் 26 )



என எல்லாப் பொறிகளையும், புலன்களையும் , இறைவனை நோக்கி மடை மாற்றம் செய்யும் படித் தூண்டுகிறார் மணிவாசகப் பெருந்தகை.
இதுதான் நிதர்சனமான உண்மை.  யோகம் பயிலும் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய கருத்தும் இதுவேதான். இதனைப் பின் பற்றினால் நாம் உண்மையான அனுபவ அறிவினைப் பெறலாம்.

திருமந்திரப் பாடல்கள்  பற்றிய விரிவான விளக்கங்களை அறிந்து கொள்ள...



5 comments:

  1. நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால்
    தினைத்தனையும் ஆவது இல்லை; சொல்லல் ஆவ கேட்பவே;
    அனைத்து உலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா;
    எனைத்து, எனைத்து அது, எப் புறத்தது எந்தை பாதம் எய்தவே?........,.அம்மா

    ReplyDelete
  2. நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால்
    தினைத்தனையும் ஆவது இல்லை; சொல்லல் ஆவ கேட்பவே;
    அனைத்து உலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா;
    எனைத்து, எனைத்து அது, எப் புறத்தது எந்தை பாதம் எய்தவே?........,.அம்மா

    ReplyDelete
  3. Sivaya nama...Amma thiruvadi saranam

    ReplyDelete