20 May 2017

குரு சீடர் பரம்பரை;

குரு சீடர் பரம்பரை;


காலம் காலமாக நமது நாட்டில்
பரம்பரை என்று ஒரு சம்பிரதாயம் நிலவி வருகின்றது.குருகுலக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உபதேசத்தின் சிறப்புக்கருதியும் அதனை அவர்கள் கவனமாகக் கைக்கொள்ள வேண்டும்.என்பது பற்றியும் ஒவ்வொருக்கும், மிகவும் இரகசியமாகக் குருமந்திரத்தைக் கூறுவர்.
குருவிடம் 100 மாணாக்கர்கள் இருந்தால் நூறு பேருக்கும் ஒரே மந்திரத்தையோ வேறு வேறு மந்திரத்தையோ குரு உபதேசிப்பார்.அதனை மிகவும் இரகசியமாக உபதேசிப்பர்.இந்த மந்திரங்கள் இறை அனுபவத்தைப் பெற்றுத்தருவதால்"உபதேச மந்திரப் பொருளானே"-என்பார் அருணகிரியார்.
அகண்ட விஸ்வமான பரம்பொருளை நம்முள் உணர்வதே இறை அனுபவத்தின் நுட்பம். இரகசியமான உபதேசம் நம்முள் தோன்றுவதனை, "விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து" -என்பார் ஔவை.
மந்திரம் நமக்குள் ஊறி, நமது அனுபவமாகும் போது நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முச்சும் நம்மைப் பக்குவப்படுத்தும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் அது சாந்தப்படுத்தும் .உடலும் உடல்சார்ந்த குற்றங்களும் நம்மைத் துன்புறுத்தும் போது பிரபஞ்ச ஆற்றலைச் சரணடைய வேண்டும் .அப்போது பிரபஞ்ச ஆற்றலின் பெருமை நம்மை ஏற்றுக்கொண்டு நம்மையும் அது மயமாக்கிவிடும்."யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே" -என்பார் அருணகிரியார்.

பிரபஞ்ச ஆற்றலோடு நம்மை இணைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்வோம்.அது நம்மையே நமக்குத் தந்து தன் அருள் ஒளியால் நம்மைப் புனிதப்படுத்தும்

1 comment:

  1. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
    அவனை வழிபட்டங் காமாறொன்றில்லை
    அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
    குரூவை வழிபடிற் கூடலுமாமே

    ReplyDelete