9 May 2017

ஆறாம் அறிவு எங்கே?

  அருட்பெருஞ்ஜோதி      தனிப்பெருங்கருணை      அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி


          'நாயினும் கடையேன் 
     ஈயினும் இழிந்தேன்"
     ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி’   
                                                                                        _ என்பார் வள்ளல்பிரானார்.

                 
                          

ஒவ்வொருவரும் தன்னை நாயுடன் ஒப்பிட்டு இப்படிக் குறைத்துக்கொள்கிறார்களே ஏன்? நாய் தன் தலைவன் எந்த வேடத்தில் வந்தாலும் கண்டுபிடித்துவிடும் இயல்புடையதுஒரு நாடக நடிகர்; ஒரு நாய் வளர்த்தார். நடிகர் வெளியூருக்கு நடிக்கச்சென்று விடுவார். ஒருநாள் ராஜாவாக நடித்தார்தனது வேடத்தைக் கலைக்காமலேயே ராஜாவாக வீட்டிற்கு வந்தார்நடிகரின் குழந்தை 2 வயதுடையது. அதற்குத் தன் தந்தைதான் ராஜா வேடத்தில் உள்ளார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை

அவர் வளர்த்த நாய் இவர் வந்ததும், ஓடிவந்து குரைத்ததுஇவரது காலை நக்கிக்கொடுத்தது. தான்பெற்ற குழந்தைக்கு தனது வேடம் மாறியதால் அடையாளம் தெரியவில்லை. ஆனால் தான் வளர்த்த நாய் தன்னைக் கண்டுகொண்டதே! நடிகருக்கு ஒரே ஆச்சரியம்அடுத்தநாள் துறவியாக வேடம் பூண்டார். துறவி வேடத்திலும் தனது தலைவன்தான் உள்ளான் என்று கண்டுகொண்டது நாய்


ஹோமர் என்னும் ஆங்கிலக்கவிஞர் இலியட் என்னும் ஒருகாப்பியம் எழுதியுள்ளார்சிறுவன் ஒருவன் காணாமல் போய்விடுகின்றான்ஆண்டுகள் பல கழிந்த பிறகு ஊர்வருகின்றான். தன் வீட்டை அடையாளம் கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து விடுகின்றான். வீட்டு வாசலில் நிற்கும் காவலாளிக்கு அடையாளம் தெரியவில்லை. ஒருவாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே செல்கின்றான்பெற்றோருக்கும் அடையாளம் தெரியவில்லைஆனால் இலியட் சிறுவனாக இருக்கும்போது இருந்த நாய் இலியட்டை அடையாளம் கண்டு அன்பு பாராட்டியது.

                நாய் கூட தன் தலைவனை உணா்வினால் அறிந்து கொள்கின்றது.  ஆனால் ஆறாம் அறிவினால் மனிதன் அடைந்த பயன்?

4 comments:

  1. புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
    பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
    கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
    வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
    மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன் அம்மா.....

    ReplyDelete
  2. Thought Provoking Article.

    ReplyDelete
  3. The explanation makes us to feel and yearn for the Omnipotent....Amma

    ReplyDelete
  4. நாயாவது பரவாயில்லை. அடியேன் இன்னும் முட்டிலேன் தலை கீறேன் தெருவுதோறும் அலைகிலேன் என்செய்வேன். ஈயின் நிலை என்ன அதுவும் தெரிகிலேன் தாயே.

    ReplyDelete