21 July 2018

திருக்கதவம் திறத்தல் - Opening the Gate to eternal bliss


திருக்கதவம் திறத்தல்

நாம் ஒவ்வொருவா் உடலிலும் திருக்கதவம் திறக்கும் ஒரு அருள் அனுபவம் உண்டு.  அதனை உணா்ந்து கொள்ளாமல் நாம் இருக்கிறோம்.  எளிய வழியைக் காட்டுகின்றார்கள் நம் அருளாளா்கள்.

சொல்லும் பொருளும் கடந்தவன் இறைவன் என்றாலும் சொல்லும் பொருளுமானவனாகவும் அவனே உள்ளான் என்பதனால் திருநாவுக்கரசரின் பாடலில் உள்ள சொல் நயத்தையும் , பொருள் நயத்தையும் இசை நயத்தையும் அனுபவித்து இறைவனும் தன்னை மறந்தான்


     ஏழிசையாய், இசைப்பயனாய் இருக்கும் இறைவன், தன்னை மறந்து பத்துப் பாடல்கள் பாடும்வரை கதவு திறப்பிக்கவில்லை. பதினொன்றாம் பாடலில் புன்னை மரங்கள் சூழ்ந்த மறைக்காட்டில் அமர்ந்துள்ள பெருமானே,  முத்துக்கள் செழித்துள்ள உனது இடத்தினில், உனது கருணையும் செழிக்க வேண்டுமே! புன்னை மரங்கள் பூத்துக் குலுங்கி புதுமணம் பரப்புகின்றதே. உனது திருக்கருணையாகிய அருள்மணமும் பரப்பவேண்டுமே! திருமறைக்காட்டில் வேதங்களால் பூசிக்கப்பட்ட கதவை இறை அனுமதி பெறாமல், தான் கதவு திறக்கப் பாடியது தவறோ! என்று மனம் உருகுகின்றார் அப்பர் சுவாமிகள்இறைவனது கருணைக்கு ஏங்கி, ஊர்மக்கள் வேண்டுதலையே உன்னிடம் வேண்டினேனே தவிர, தன் முனைப்பால் நான் பாடவில்லை என்று இறைஞ்சினார் அப்பர் சுவாமிகள்


     திருநாவுக்கரசருக்கு மனத்திலும், உணர்விலும் நின்று அருள் செய்பவன் மறைக்காடுறையும் மணாளன். அவருக்கு நிச்சயம் கண்ணிலும் நின்று அருள் செய்திருப்பான். ஆனால் உலகமக்கள் நேர் வழிப்பாதையில் சென்று இறைவன் இருந்த கோலத்தை தங்கள் கண்ணால் கண்டுகளிக்க வேண்டும் என்று விரும்பினார் நாவரசர்.


பெட்டியிதில் உலவாத பெரும்பொருள் உண்டு இதுநீ 
பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுகோலும்
 எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
     இதுதருணம் திறந்தனை எடுக்க முயல்கின்றேன்
 அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் 
     அரைக்கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக 
 வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் நும்மானை 
     மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே 
                                           (அருட்பா)

     எந்நாளும் இன்பமாக இருப்பதற்கு நாவரசர் வழி கூறுகின்றார். எம வாதனையைத் தடுத்து நிறுத்திவிடலாம். உலகியலீர் வம்மின் இருந்து சொல்லுவேன் நான் கூறுவதைக் கேளுங்கள். மணிக்கதவம் திறத்தல் என்பது திருக்கோவிலில், திருமறைக்காட்டில் நடந்ததாக நினைக்கவேண்டாம். நம் ஒவ்வொருவரிடமும் மணிக்கதவம் திறப்பிப்பதற்கான உபாயம் உள்ளது. அந்த மணிக்கதவு திறக்கும் சாவியினை நாம் பெற்றுக்கொண்டு, உரிய நேரத்தில் உரிய வழியில் நாம் திறந்தால் எந்நாளும் இன்ப அனுபவம் அனுபவிக்கலாம்.

     நட்பு, அனுதாபம், மகிழ்ச்சி, புறக்கணித்தல் என்று நான்கு சாவிகளைக் கொண்டு நம்முள் இருக்கும் திருக்கதவினை நாம் திறந்து கொள்ளலாம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.

1) எந்நாளும் இன்பமே துன்பமில்லை என்னும் மனோநிலை
  ஒரு சாவி.
2) தர்மம் தவறாமல் நடப்பது இரண்டாவது சாவி.
3) மகிழ்வுடன் இல்லாதவர்களை கண்டு இரக்கம் காட்டுவது
  மூன்றாவது சாவி.
4) கொடூரமானர்வர்களின் உறவினைத் தவிர்ப்பது நாலாவது
  சாவி.
    
இந்த
நான்கு சாவிகளையும் எப்போதும் நாம் கையில் வைத்திருந்தால் மன அமைதி என்னும் கோட்டையின் நான்கு வாசலையும் திறந்து அதில் எந்நாளும் இன்பமுடன் வாழலாம்.


யோக
நிலையில் நிலைபெறுவதற்கும், நம் உடல், உயிர், உணர்வு இவைகளைக் கையாள்வதற்கும் சரியான சாவிகளை உபயோகப் படுத்தினால் நாம் இறைநிலை அடையலாம். இதை அனுபவத்தில் உணர்ந்திருந்தார்  நாவரசர்அதனால் மறைக்காடுறையும் வேதநாயகனிடம் நான் உணர்வினால் அனுபவித்த ஞானநிலையில் நீ என்னோடு இரண்டறக் கலந்து நிற்கின்றாய். அதனால் ஐம்புலன்கள் அகத்தடக்கி இன்ப அனுபவம் நிறையப் பெற்றேன். பெட்டியதில் உலவாத பெரும்பொருளையும், அது திறக்கும் பெரும் திறவுகோலையும் நான் பெற்றதுபோல், இவ்வுலக மக்களும் பெறுவதற்கு உதவவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார் அப்பரடிகள்


11 July 2018

Guru's blessing beyond time and space - தானே வந்து எம்மைத் தலை அளித்தருளி


தானே வந்து எம்மைத் தலை அளித்தருளி



திரு.டிக்கன்ஸன் என்பவர் பரமஹம்ச யோகானந்தரின் சீடர். அவர் பரமஹம்ச யோகானந்தரால் அமெரிக்காவில் நிறுவப்;பட்ட யோகதா சத்சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.  ஒவ்வொரு வருடமும் யோகதா சத்சங்கத்தினர் டிசம்பர் 23ம் தேதி அன்று கூட்டுத் தியானப் பயிற்சியாக எட்டு மணிநேரம் பயிற்சி செய்வார்கள்.  பிறகு கிறிஸ்துமஸ் பரிசு வழங்குவார்கள்.


     இந்தியாவிற்கு மீண்டும் வந்துவிட்டுச் சென்ற யோகானந்தர் இந்தியாவில் உள்ள கலைநயம் மிக்க பொருட்களை கிறிஸ்துமஸ் பரிசு வழங்குவதற்காக வாங்கிச்  சென்றிருந்தார். 1936 ஆம் ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் யோகானந்தர் கலந்து பரிசு வழங்கினார்.


     திரு. டிக்கன்சனுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணத்தைப் பரமஹம்சர் பரிசாக அளித்தார்.  இறைவனுடைய படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே மனித இனத்திற்கு வழங்கப்படும் பரிசுகள்தான். அப்பரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இறைவனுக்கு செலுத்தும் நன்றிதான் விழாக்காலக் கொண்டாட்டங்கள்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் இறைவனுக்காக நன்றி செலுத்தப்படவேண்டியது இருக்க விழாக்காலங்களிலாவது இறைவனை நினைப்பதற்கான ஒரு வழிதான் பண்டிகை நாட்கள்.


     பரமஹம்சரிடமிருந்துää வெள்ளிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட டிக்கன்சன் தன்னை மறந்தார்.  அந்த வெள்ளிக் கிண்ணம் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சியை நினைவுபடுத்தியது.  தானே வந்து தலை அளித்தாண்ட குருவின் பாதம் பணிந்தார்.


     நெப்ராஸ்காவில் உள்ள 15 அடி ஆழமுள்ள குளத்திற்கருகில் டிக்கன்சனும் அவரது சகோதரரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.  விளையாட்டின் வேகத்தில் டிக்கன்சனை சகோதரர் தள்ளிவிட்டார்.  டிக்கன்சன் குளத்திற்குள் விழுந்துவிட்டார்.  அப்போது அவருக்கு ஐந்து வயதே நிரம்பி இருந்தது.


     தண்ணீருக்குள் டிக்கன்சன் முழுகிக் கொண்டிருந்தார். அவரைத் தண்ணீருக்கு அடியில் மூழ்கவிடாமல் பல வண்ண நிறங்களில் ஜொலிக்கும் ஒரு ஒளி வெள்ளம் பாதுகாப்பதாக உணர்ந்தார்.  அந்த ஒளி வெள்ளத்தின் மத்தியில் நம்பிக்கை அளிக்கும் புன்னகையுடனும்ää சாந்தமான கண்களுடனும் கூடிய மனித உருவம் தனது முழு ஆற்றலையும் செலுத்தி தன்னைப் பாதுகாப்பதாக அவர் உணர்ந்தார்.  டிக்கன்சனின் சகோதரரின் நண்பர்கள் அங்கிருந்த ஒரு அலரி மரத்தினை வளைத்து தண்ணீருக்குள் அமிழ்த்தினர்.  டிக்கன்சனை அந்த மரத்தின் கிளையினைப் பிடித்துக் கொள்ளும்படியாகக் கூறினர்.  எப்படியோ அவ்வொளி வெள்ளத்துள் அழுந்திய அந்த தெய்வத் திருவுருவின் அருளால் நண்பர்கள் டிக்கன்சனைக் காப்பாற்றினர்.


     பன்னிரண்டு வருடங்கள் கழித்து டிக்கன்சன் சிகாகோவிற்குச் சென்றார்.  அப்போது அவருக்கு வயது பதினைந்து. 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக சர்வ மத மகாசபைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. டிக்கன்சனும் அவரது அன்னையும் சிகாகோவின் ஒரு முதன்மைச் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது நீரில் மூழ்கும்போது ஐந்து வயதில் கண்ட அதே சக்தி வாய்ந்த ஒளி வீச்சைக் கண்டார்.  உடனே தாயாரிடம் அம்மனிதரை அடையாளம் காட்டினார்.


     சுவாமி விவேகானந்தர்தான்ää டிக்கன்சன் ஒளிவடிவில் கண்ட மகான்.  பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க சிகாகோ கலை அரங்கில் மீண்டும் அவரைப் பார்க்கவும் அவரது அருள் சொற்பெருக்கைக் கேட்கவும் இறையருள் கூட்டுவித்தது.


     சொற்பொழிவு முடிந்ததும் டிக்கன்சன் சுவாமிஜியைக் காண அவர் அருகில் சென்றார்.  இந்தியச் சாதுவிடம் தனது உணர்ச்சிகளை எப்படி பரிமாறிக்கொள்வது என்பது அவருக்குப் புரியவில்லை.  இருந்தாலும் அவரே தனக்கு ஞான குருவாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று நினைத்து அவரது அருகில் சென்றார்.


     சர அசர உயிர்தோறும் சாற்றிய பொருள்தோறும் விராவியுள் விளங்கும் வித்தகமணியான ஞானகுரு டிக்கன்சன் மனத்தினுள் என்ன எண்ண ஓட்டம் ஓடுகின்றது என்பதைப் புரிந்துகொண்டார்.  மகனே நான் உனக்குக் குரு அல்ல. உனது குருவும் இந்தியாவிலிருந்தே வருவார்.  அவர் உனக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் பரிசாக அளிப்பார்.  அவர்தான் உனது குரு என்றார்.  அந்த 1893 ம் ஆண்டுதான் பரமஹம்ச யோகானந்தர் பிறந்த ஆண்டு. அத்துடன் தண்ணீரை விட்டு எப்போதும் சற்று விலகியே இரு என்றும் சுவாமிஜி அறிவுரை கூறினார். சில நாட்கள் டிக்கன்சன் சிகாகோவிலிருந்துவிட்டுப் பிறகுää தனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.  அதன்பிறகு அவர் சுவாமிஜியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

     கி.பி. 1893 இல் நடந்த இந்நிகழ்விற்குப் பிறகு இறைவனிடம் டிக்கன்சன் தனது குருவை எப்போது அனுப்புவாய் என்று அடிக்கடி பிரார்த்தனை செய்வார்.  1925 ஆம் வருடம் ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து இறைவனிடம் வேண்டினார். இறைவா! எனது குருவை விரைவில் என்னிடம் அனுப்பிவை என்பதாக அவரது பிரார்த்தனை இருந்தது.


     மறுநாள் இரவு ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரைச் சந்திக்கவும் , அவரது சொற்பொழிவைக் கேட்கவும் செய்தார்அவர்தான் தனது குருநாதர் என்று தெரிந்து கொண்டார்ஆனால் அப்போது யோகானந்தர் எந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொடுக்கவில்லை. ஆனாலும் டிக்கன்சனது உள்ளுணர்வு யோகானந்தர்தான் தனது குரு என்று அடிக்கடி உணர்த்திக்கொண்டு இருந்தது. யோகானந்தரிடம் முறையாக கிரியா யோக தீட்சை பெற்றுக்கொண்டார். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுவாமி விவேகானந்தர் கூறிய அதே வெள்ளிக் கிண்ணத்தை பரமஹம்சர் டிக்கன்சனிடம் வழங்கினார்;.  சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து நாற்பத்து மூன்று ஆண்டுகட்குப் பிறகு அந்த வெள்ளிக் கிண்ணம் டிக்கன்சனுக்குக் கிடைத்தது.

     ஆத்மஞானம் பெறவேண்டும் என்று விரும்பும் தொண்டர்களுக்கு இறைவனே குருநாதராக வருகின்றார்.  காலம் , தேசம் ,  மொழி இவைகளைக் கடந்து குருநாதர் அருள் செய்கின்றார்.