18 June 2017

Knowing yourself - தன்னை அறிதல்

தன்னை அறிதல்

ஒவ்வொரு மனிதனும் தனக்கு வெளியே பகை உள்ளது என்றும், அப் பகைவர்களை அழிப்பதற்கு என்ன என்ன யுக்திகள், தந்திரங்கள் கையாண்டு அவற்றை வெல்வது என்றும் சிந்திகின்றான்இதில் தனி மனிதன் அவனது தகுதிக்கு ஏற்றவாறும், நாடுகள் அவற்றின் தகுதிக்கு ஏற்றவாறும், வல்லரசுகள் அதன் அதன் தகுதிக்கு ஏற்றவாறும் ஆயுதங்கள் செய்து நாம் தான் வெல்லவேண்டும், வேறு யாரும் வென்று விடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளார்கள்வள்ளல்பெருந்தகை இவற்றை எல்லாம் கவனிக்கின்றார்


  “ தன்னை அறிந்து இன்பமுறு வெண்ணிலாவே
 ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே …”


என்று இதனைக் குறிப்பிடுகிறார். தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம். நம் உட் பகைவர்களை வெல்லலாம் என்பதே வள்ளல் கூறும் அறிவுரை.


உன்னையே நீ வெல்வாய்


                நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர்களை வெல்லவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளீர்களே! உங்களை உள்ளும் புறமும் அரித்துத் தின்று செல்லரிக்க வைக்கின்ற உள் பகைவனைப் பற்றிச் சிந்தித்தீர்களா?  என்று வினாவுகின்றார். இதிகாசங்கள் புராணங்கள் நமக்கு நிறைய அறிவு புகட்டுகின்றது. சிறிய கதை முதல் பெரிய காப்பியம் வரை மனிதன் எப்படி வாழவேண்டும் என்றும், அப்படி வாழத் தவறினால் என்ன நடக்கும் என்றும் புரிய வைத்தன.


                ஹிட்லர், முஸோலினி போன்றவர்கள் நாட்டை ஆண்டார்கள் வெற்றி கொண்டார்கள்ஆனால் அவர்கள், அவர்களது மனத்தை ஆளுமை செய்யத் தவறி விட்டார்கள்அது மட்டுமா! புராண வரலாறு கூறும் கதை என்ன? “வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்உடைய மிகச்சிறந்த வீரன் இராவணன். அவன் அனைத்து தேசங்களையும் வென்றது மட்டுமல்ல. வானியல் சாஸ்திரத்திலும் கற்றுத்துறை போகியவன்முப்பத்து முக்கோடி வாழ்நாள் வரம் பெற்றவன்சாம கானம் மீட்டத் தெரிந்தவன். நவக் கிரகங்களையும்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். பூலோகம் முழுவதையும் வென்றான். எல்லாம் தெரிந்திருந்தான். அடுத்தவனை வெல்வது எப்படி என்று சதாவும் யோசித்துக் கொண்டிருந்த அவன் ஒன்றைத் தெரியாமல் விட்டு விட்டான்எதைச் செய்தால் தன்னை அறியலாம்; எதைச்செய்தால் தமது மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதைத் தெரியும் வகையை அவன் அறியவில்லை.


                புறப்பகை மட்டுமே அவனை அரித்து வந்தது. அகப்பகை பற்றிய எண்ணம் அவனது சிந்தனையைத் தூண்டவில்லை. சமுதாயம் நிலைபெற வேண்டுமானால் அகப்பகை பற்றித் தெரிந்து அதை அழிக்கவேண்டும் என்று எண்ணுகின்றது வள்ளல் மனம்


                தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்நிறை வாழ்வு பெறலாம்.


No comments:

Post a Comment