ஆன்ம யாத்திரை
யாத்திரை அக யாத்திரை, புற யாத்திரை என இருவகைப்படும். ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்தும் புற யாத்திரை செய்வன. இரை தேடுவதற்கும், இனவிருத்திக்காகவும் அவைகள் தங்கள் தங்கள் யாத்திரையைத் துவங்குகின்றன. ஈ, எறும்பு முதலியன தனது மோப்ப சக்தியினால் இரை தேடவும், இன விருத்திக்காகவும் யாத்திரையைத் துவங்குகின்றன.
கால்நடைகள் அவ்வாறில்லை மனிதனின் பயன்பாட்டிற்கு உதவும் ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலியன மனிதனின் இச்சைப்படியே செயல்புரிகின்றன. மனிதனே அவைகள் போகும் இடத்தை நிர்ணயிக்கின்றான். அதன்வழி கால்நடைகள் தங்களது யாத்திரைகளை மேற்கொள்கின்றன. கால்நடைகளும் காலால் நடக்கின்றன. மனிதனும் காலால் நடக்கின்றான். ஆனால் விலங்கினங்கள் மட்டுமே கால்நடைகள் என பெயர் பெறுகின்றன ஏன்?
மனிதன் காலால் நடந்தாலும் அவன் கால்நடை இல்லை. மனம் என்னும் பண்பு, மனிதம் என்னும் நேயம், பிற உயிர்களுக்கு இரங்கள் போன்ற பல பண்புகள் கால்நடைகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்துகின்றது. கால்நடைகளை இயக்குபவன் மனிதன். மனிதனை இயக்குவது மனிதனின் இச்சைகளும், இச்சைவயப்பட்ட மனமுமேயாகும்.
"ஆடிய திருவை அரைச்சுற்று சுற்று முன் ஓடிய மனம் ஒரு கோடி நினைக்கும்" என்பது பழமொழி.
திருவை என்பது தானியங்களை மாவாக்கும் இயந்திரம். 45 ஆண்டுகளுக்கு முன் கையால் இயக்கும், இதனைப் பயன்படுத்தி மாவு அரைப்பர். இரண்டடி விட்டம் கொண்ட வட்ட வடிவமானது. அதை அரை சுற்று சுற்றி வருவதற்கு சில நொடிகள் ஆகும் அதற்குள் மனம் உலகம் முழுவதும் சஞ்சரித்துவிடும் என்பது இப்பழமொழியின் விளக்கமாகும.
யாத்திரைக்கு நாம் என்னென்ன ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த சிந்தனையில் சிந்திப்போம்……………………………..
No comments:
Post a Comment