23 June 2017

Aanma Journey - Part 3 ஆன்ம யாத்திரை - பகுதி 3


ஆன்ம யாத்திரை - பகுதி 3 


ஒரு செல் தாவரத்திலிருந்து பிறந்து பிறந்து உயிர், இளைத்துக் களைத்தது. இறைவன் தனக்கு அருளிச் செய்த அருளிப்பாடே மனிதப் பிறவி எனச் சிந்தித்தது. எத்தனை எத்தனை துன்பங்களிலிருந்து இறைவன் தன்னைப் பிழைக்க வைத்தான் எனச் சிந்தித்தது.


"
யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும்,
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;" 


தாயார் கருப்பையில் தான் புகுந்ததை ஒரு யாத்திரையாகவே சித்தரிக்கின்றார் மணிவாசகர். எறும்பு என்னும் உடலில் இருந்து யாத்திரையைத் துவங்கிய உயிர் யானை வரை தனது யாத்திரையை நிறைவு செய்தது. சிறிய உருவத்தில் இருந்து மிகப்பருமனான உயிர் வரை யாத்திரை செய்தது.
கால் நடையாகப்பிறந்த உயிர் மனிதனாக உரு எடுத்ததும், தான் காப்பாற்றப்பட்டதை எண்ணி வியக்கின்றது. ஒவ்வொரு மாத வளர்ச்சியும் ஒரு யாத்திரை என்பதை உணருகின்றது. இதனை

"
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தம்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும் 
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊர் அலர் பிழைத்தும்"

என்று ஒவ்வொரு மாதமும் கருவின் யாத்திரையைப் பதிவு செய்கின்றார் அடிகள்
குழந்தையின் யாத்திரை ஒவ்வொரு படித்தரமாக வளருகின்றது.



ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தசமதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்"


முழுவளர்ச்சி பெற்ற குழந்தை, இப்பூமிக்கு அதன் யாத்திரை துவங்கும் போது தாயின் பேறு கால வலியை "துக்கசாகரம்" என்று குறிப்பிடுகின்றார். கடல் அளவு, நீள, அகல, ஆழம் காண முடியாத துக்கம் தாய்க்கும், சேய்க்கு துயர சாகரமும் உண்டாகின்றது. தாயும் சேயும் துக்க சாகரத்தையும், துயர சாகரத்தையும் அனுபவிப்பதிலிருந்து பிழைக்க வேண்டும்.


குழந்தையின் யாத்திரை ஒவ்வொரு படித்தரமாக வளருகின்றது.

"
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இறுதியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்".

காலையில் இயற்கை உபாதிகளான மலஜலத்திலிருந்து பிழைக்க வைத்தார் என்றும், கடும் பகல் வேளையில் பசியிலிருந்து பிழைக்க வைத்தார் என்றும், நிசிவேளையில் நித்திரையிலிருந்து பிழைக்க வைத்தார் என்றும், தனது வாழ்க்கை யாத்திரையில் தான் சந்தித்த நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் அடிகள்.







---யாத்திரை தொடரும்.

No comments:

Post a Comment