30 July 2017

Manickavasagar's love - மாணிக்கவாசகரின் காதல்

மாணிக்கவாசகரின் காதல்

                மாணிக்கவாசகரும் காதல் செய்தார். குதிரை வாங்குவதற்காகச் சென்றவரை இறைவன் தாமே ஆட்கொண்டார்தனது தாளில் சேர்த்துக்கொண்டார்அவர் பெற்றுக்கொண்ட திருவடி அனுபவத்தினை வைப்பதற்கு இடமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். அமைச்சராக இருந்தவர் தற்போது அடியவராகிவிட்டார்;.  மக்கள் இவரைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். எவ்வளவு பெரிய படிப்புஎவ்வளவு பெரிய பட்டம்; எவ்வளவு அதிகாரம் இவை எல்லாவற்றையும் துறந்து விட்டு இது என்ன இப்படித் திரிகின்றார்? அனைவரும் எள்ளி நகையாடுகின்றனர்அந்த எள்ளி நகையாடுதலைப் பொருட்படுத்தாத ஓர் உயரிய ஞானத்தை இறைவன் மாணிக்கவாசகருக்கு அளித்தான்திருப்பெருந்துறையில் தன்னை வலிய ஆட்கொண்ட திருவடியினைத் தான் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்பது ஓர் ஆசை. அடியவர் கூட்டில் சேர விரும்புவது ஓர் ஆசை என்று இருவித ஆசைகள் மாணிக்கவாசகருக்கு இருந்தது.


                ஊர் ஊராகத் திரிந்து தன் தலைவன் திருவடியினையும் அடியவர் கூட்டத்தையும் தேடுகின்றார். அதற்காகக் காதல் செய்தார்காலம் உண்டாகவே காதல் செய்தார்எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒன்று அவருக்குக் காத்திருந்தது. திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டுத் தேடிக்கொண்டே வந்தார்கடைசியாக திருக்கழுக்குன்றம் வந்தார்.


பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த
                                   பெருந்துறைப் பெரு வெள்ளமே
                ஏதமே பல பேச நீ எனை
                    ஏதிலார் முனம் என் செய்தாய்
                சாதல் சாதல் பொல்லாமை அற்ற
                    தனிச் சரண் சரணாம் எனக்
                காதலால் உனை ஓத நீ வந்து
                    காட்டினாய் கழுக்குன்றிலே”                                             
                                                                                (திருவாசகம்)


                பேதம் இல்லது ஓர் கற்பு என்பது ஆன்ம நேயத்தின் ஓர் உன்னத நிலைஇறையருள் பெறவும், இறைவனோடு இரண்டறக் கலக்கவும் விரும்பும் ஆன்மா தனது ஆன்ம பயணத்தின் நிறைவாக அடையவேண்டிய ஓர் பக்குவம். “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் நினைப்பதுஎன்னும் அருள் அனுபவ நிலை. அந்நிலையே பேதம் இல்லாத கற்பு நிலையாகும். அவ்வனுபவம் பெறும் உயிர் பேதம் இல்லாத கற்பு நிலையிலேயே நிற்கும் என்பது அருளாளர்கள் கண்ட உண்மை.                                                                          
                பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரிபூரணத்தை உணர்கின்ற ஓர் உணர்வு நிலை அதுஅந்த உணர்வு நிலையினைத் திருக்கழுக்குன்றத்தில் அருளுகின்றார் சிவபெருமான். அத்துடன் திருவடிப் பேற்றையும் மீண்டும் அளிக்கின்றார். திருவடி இவருக்கு என்ன பேற்றை நல்கியது.


“...சாதல் சாதல் பொல்லாமை அற்ற
                  தனிச் சரண் சரணாம் எனக் 
 காதலால் உனை ஓத நீ வந்து
காட்டினாய்...” 
                                                                (திருவாசகம்)

                சாதல் என்பது மிகவும் துயர் தரக்கூடியது பொறி , புலன்கள் கடந்த மகான்களைக் கூட ஒரு கண நேரம் செயல் இழக்கச் செய்யக் கூடியது. அந்த சாவையும் மாணிக்கவாசகர் வென்றுவிட்டார்இவையெல்லாம் எப்படி நடந்தது!  ‘காதலால் உனை ஓதஎன்கின்றார்.

இன்றோ என்றோ


                காதல் சாதலைத் தவிர்க்கும் என்கிறார் மாணிக்கவாசகர்இறையடியவர்கள் அனைவரும்,

இன்று வருமோ நாளை வருமோ மற்று
 என்று வருமோ துன்று மல வெம்மாயை
 அற்றுவெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம்
                                                                                                      (அருட்பா)


                என்று இறைவனோடு இரண்டற்ற நிலையில் சுகமாக இருப்பது இன்றைக்கு வருமோ மற்று என்றைக்கு வருமோ என்று இருந்தார்கள்அது அருள்நிலை பெற்றவர்கள் இயல்பு. ஆனால் நமது இயல்பு வேறுவிதமாக உள்ளதுஇன்று வருமோ! நாளை வருமோமற்று என்று வருமோ மரணம் என்று நாம் தினமும் சாவு ஓலையைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றோம்.


                நாம் எடுத்த தேகம் விழுமுன் இன்புறவேண்டுமானால், இறைக்காதல் பெருவெள்ளம் முற்றி, விழுங்கும் அளவு அன்பு செய்யத் தெரிந்துகொள்ள வேண்டும்.


காலம் உண்டாகவே காதல் செய்து
                  உய்ம்மின் கருது அரிய
 ஞாலம் உண்டானோடு நான்முகன்
                   வானவர் நண் அரிய
 ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்
                   பிரான் தன் அடியவர்க்கு
 மூல பண்டாரம் வழங்குகின்றான்
                   வந்து முந்துமினே”                                                       
                                                                                                                                                                                                                                                                           (திருவாசகம்)


                எல்லோருக்கும் நிதி தேவைப்படுகின்றதுநிதி என்பது பொருள் நிதியாக இருக்கலாம் அருள் நிதியாக இருக்கலாம்; ஆனந்த நிதியாக இருக்கலாம்; கல்வி நிதியாக இருக்கலாம்


எவ்வகை நிதிகளும் இந்த மாநிதியிடம்
 அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே
                                                                                                                                                                                                                                                                                            (அருட்பா

                அந்த மா நிதிதான் மூல பண்டாரம். காலம் கிடைத்தற்கரியது. இறைவனைக் கால காலன் என்று கூறுவார்கள்மாணிக்கவாசகரும்,காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலேஎன்றார். காலத்தை ஓதவேண்டும்; காதலால் ஓத வேண்டும்மூல பண்டாரம் வந்து நிதி வழங்குகின்றான்அதைப் பெறுவதற்கு ஓத வேண்டும்பேதமில்லாத சமரச சுத்த சன்மார்க்க சங்கத்து அடைவித்து விட ஓதவேண்டும்அண்டத் துரிசையும், பிண்டத் துரிசையும் அடித்துச் செல்லக்கூடிய காட்டாற்றுப் பெருவெள்ளம் அதைக் காதலால் ஓதினால் அக் காதல் உயா்ந்த பரம் பெருங் கருணையால் ஆசை தீா்த்தது. உணா்வு தந்ததுஒளி ஆக்கியதுஅடியார் அடி கூட்டியதுஅதனால் காதலால் ஓதுவோம்காலையே ஓதுவோம்.


29 July 2017

Elephant Sculpture is Eating!!! - கரும்பு தின்னும் கல் யானை


கரும்பு தின்னும் கல் யானை


                           மதுரைப் பதியில் எல்லாம் வல்ல சித்தராக சிவ பெருமான் வருகிறார்சித்தர் வேதியல் நிபுணர். தனது வேதித்தல் தொழில் மூலம் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், கூன், குருடு, செவிடு, பேடு நீக்கியும் சித்தாடல் செய்து அருள் புரிகின்றார்பாண்டிய மன்னனுக்குச் செய்தி சென்றதுஎல்லாம் வல்ல சித்தராக வந்திருப்பவர் தலை சிறந்த வேதியன் என்று அரசன் அறிந்து கொள்ளவில்லை.  

                அரசன் சித்தரைக் காண்பதற்கு வருகிறான்எல்லாம் வல்ல சித்தர் கோவில் வளாகத்தினுள் இருக்கிறார். இவர்தான் சித்தர் என்று மன்னனிடம் அமைச்சர் தெரிவித்தார். மன்னன் சித்தரிடம் இத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருக்கும் போது நீர், கோவிலில் உள்ள கல் யானையை கரும்பு தின்ன வைத்தால், உம்மை எல்லாம் வல்ல சித்தர் என்று ஏற்றுக் கொள்வதாக அரசன் கூறினான். கரும்பு கொண்டு வரப்பட்டது. கல் யானையை சித்தர் பார்த்தார்கல்யானை உடனே அசைந்ததுஅரசன் கையில் இருந்த கரும்பை இழுத்துத் தின்றது. மேலும், மன்னன் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையையும் இழுத்தது. அப்போது தான் அரசன் உணர்வு வரப்பெற்றான். தான் செய்த தவற்றினை உணர்ந்தான்.


                வேதியாய் வேத விளைபொருளாய் உள்ளவனே! நீதான் முழுமையான வேதியன்நீ உயிரூட்டிய கல் யானை பழைய நிலையினை அடையவேண்டும்அப்படி இல்லையானால் இயற்கையே மாறிவிடும். கல் கட்டிடம் அசைய ஆரம்பித்துவிடும் என்று இறைவனை வேண்டுகின்றான் அரசன்இயற்கை நிலை மாறாமல் ஆழ் ஆழிகரையின்றி நிலைநிறுத்த வல்ல வேதியன் வேதித்தலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பழைய நிலைக்கே கல் யானையை ஆக்கி விடுகின்றான்.



                சிவனுடைய மூலக்கூறுகள் நமது உடலில் புகுந்து விட்டால் நம் உடலிலும், உணர்விலும் அநேகவிதமான இரசாயன மாறுதல்கள் நடைபெறும்அதன் மூலம்,தன்னையே எனக்குத் தந்து தன் அருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி இன்பேஎன்று வள்ளல்பெருமானார் கூறுவதுபோல், தன்னைத் தந்து நம்மை வேதிக்கின்றான் அவ்வேதியன்