28 July 2017

Sight of a Guru - தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்


குருவிற்கும், சீடனுக்கும் உள்ள உறவு மிகவும் பவித்திரமானதாக இருக்க வேண்டும்சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரைக் குருவாக அடைந்தார். கல்கத்தாவிலிருந்து தட்சணேஸ்வரம் வந்து குருநாதரைப் பார்க்காமல் இருக்க மாட்டார். தினமும் குருநாதரைக் கண்டால்தான் அவருக்கு நிம்மதி


                ஒருமுறை சுவாமிஜி குருநாதரைக் காணச்சென்றார். அப்போது குருநாதர் வழக்கம் போல் இல்லை. தாயினும் சாலப்பரிந்து அன்பு காட்டும் குருநாதர் பாராமுகமாக இருந்துவிட்டார். சுவாமிஜி அதைப்பற்றி ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லைஆனால் அன்று ஒருநாள் மட்டுமல்ல. தொடர்ந்து பல நாட்கள் பரமஹம்சர் இதே நிலையைக் கடைப்பிடித்தார். சுவாமிஜி இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம்போல் அவர் குருநாதரைப் பார்க்க வந்தார்குருநாதர் பொதுவாக எல்லாத் தொண்டர்களுக்கும் செய்யும் அருளுரைகளை எல்லாம் கேட்டார் சுவாமிஜிஒவ்வொரு முறையும் குருதேவரை வணங்குவார்பிறகு கல்கத்தா சென்றுவிடுவார்.

                ஒருநாள் சக சீடர்கள் சுவாமிஜியிடம் கேட்டனர்குருநாதர் கடந்த நாற்பது தினங்களாக உங்களைப் பார்க்கவோ, பேசவோ இல்லைஅப்படி இருக்கும்போது சலிப்பில்லாமல் எப்படி நீங்கள் இங்கு வருகிறீர்கள். குருநாதர் உங்களை உதாசீனம் செய்வது உங்களுக்குப் புரியவில்லையா? என்று கேட்டனர். அதற்கு சுவாமிஜி கூறினார்


                ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்என்று குருவின் திருமேனி தரிசனத்திற்காக வருகிறேன். அவரது அருகில் இருப்பது எனக்கு மன நிறைவையும், இறை உணர்வையும் தருகிறது. அவரிடம் பேசவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்றார். குருவின் திருமேனி காண்பது சுவாமிஜிக்கு மிகப்பெரிய ஆனந்தத்தை அளித்ததுஅதனால் அவர் பேச வேண்டும் என்றோ, தனிப்பட்ட முறையில் தன் மீது சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் என்றோ  நினைக்கவில்லை. பரமஹம்சரிடம் சீடர்கள் வினவினர். சுவாமிஜி வரும்போது தாங்கள் பாராமுகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டனர்.


                பரமஹம்சர் கூறினார்குருநாதருக்கும், சீடருக்கும் உள்ள உறவு  வாய்மொழிகளால் அளவிடக்கூடியது அல்லவானகமும், மண்ணகமும் வந்து எதிர்கொள்ளும் எனில், குருவின் மகிமை வாயால் சொல்ல எளிதோ! அது உணர்வு பூர்வமானது. அவ்வுணர்வினை அனுபவிக்கும் சீடனுக்குத் தெரியும் குருவின் அருள்பற்றி என்றார் பரமஹம்சர்.

                ஒரு குருவும், சீடனும் பேசும் மொழிகள் சமயம் கடந்தது; வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.தனது சீடனைக் கண்டவுடன் குருநாதரின் மனநிலைதன் கையில் பிடித்த தனி அருட்சோதியை  என் கையில் கொடுத்த என் தனித் தந்தையேஎன்று தன் கையில் உள்ள அனைத்தையும் சீடன் கையில் ஒப்படைக்கும் இந்த மனநிலைதான் ஒரு குருவின் மனநிலை. அதைப்பற்றி பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதத்தில் ஒரு காட்சி.


                எப்படிப்பட்ட குருவும், எப்படிப்பட்ட சீடனும், ஸ்ரீ யுக்தேஸ்வரரும், பரமஹம்சரும். இந்தக குருவும், சீடனும் போல் பாரத தேசத்தில் உண்மையான குரு சீடர்கள் நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் அங்கங்கே வசித்து வருவதால்தான், உலகம் இயற்கை நிலை மாறாமல் நடந்து வருகின்றது.
                “ஐயா நான் ஞானத்தை அடைய வேண்டியும் கடவுளை அடைய வேண்டியும் வந்திருக்கிறேன். உங்களுடைய அந்தச் செல்வப் புதையல்தான் எனக்கு வேண்டும்” 


                ஸ்ரீ யுக்தேஸ்வர்கிரியை அவரது சீடர் முகுந்தன் (பரமஹம்ச யோகானந்தர்) சந்திக்கும்போது குருவிற்கு 55 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. சீடனுக்கு 15 வயதுதான் ஆகின்றது. குருதேவர் சீடனிடம் வேண்டுகிறார். ‘நான் எனது நிபந்தனை அற்ற அன்பை உனக்குத் தருகிறேன்நீயும் உனது நிபந்தனை அற்ற அன்பை எனக்குத் தரவேண்டும்அது மட்டுமல்லசாதாரண அன்பு சுயநலமுடையது. இச்சைகளிலும், திருப்திகளிலும் வேரூன்றியதுதெய்வீக அன்பு நிபந்தனை அற்றதுமாறுதல் இல்லாததுதூய அன்பின் நிலைத்த தொடர்பு ஏற்பட்ட அக்கணத்திலேயே மனித நெஞ்சத்தின் மாசுகள் நிரந்தரமாக மறைந்துவிடும். ‘எப்பொழுதாவது நான் இறை உணர்விலிருந்து நழுவுவதை நீ கண்டால் என் தலையை உன் மடிமீது இருத்தி, நாம் இருவரும் பணியும் பேரண்ட அன்பனிடம் என்னைத் திரும்பக் கொண்டுவர முயல்வதாக நீ எனக்கு வாக்குக் கொடுஎன்றார் ஸ்ரீ யுக்தேஸ்வர்

                சீடர் எப்படித் தன்னை தனது குருநாதரிடம் ஒப்படைத்தாரோ, அதை விட பல மடங்கு ஆற்றலுடன் குருநாதர் தன்னை தனது சீடனிடம் ஒப்படைத்தார். எந்த அளவு ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு குருநாதர் பரிசுத்த ஆத்மானந்தத்தில் திளைத்திருந்தால் இந்தத் தெளிவு அவரிடம் காணப்படும் என்று சீடன் திகைத்து நிற்கிறார். குரு சீடன் என்று இருந்தால் இப்படி ஒரு குருவும் சீடனும்போல் இருக்கவேண்டும்.



                தெரிசிக்கப், பூசிக்கப், பாதகம் சூட தகும் குருவின் திருமேனி.  

No comments:

Post a Comment