14 July 2017

இருபதில் அறியவேண்டியது - Choosing the gender of the child

இருபதில்   அறியவேண்டியது

     சர, அசரப் பொருட்கள் அனைத்தும் உலகில் தோன்றியதன் பயனாக யாருக்காவது ஒரு வகையில் உபயோகமாக உள்ளதுஇலை தளைகள் ஆடு மாடுகளுக்கு உணவாகின்றது. கட்டில், ஜன்னல் மற்றும் கதவு என்று பல தரப்பட்ட பொருள்கள் செய்வதற்கு மரம் பயன்படுகின்றது. சிந்திக்கும் ஆற்றல் இல்லாத இவைகள் எல்லாமே பிறருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுகின்றனமேலும் இந்த மரங்கள் தன் இனத்துடன் ஒட்டிய வகையையே இன விருத்தியும் செய்கின்றன. மாமரத்திலிருந்து மாம்பழம் உருவாகின்றது. எந்த வகை மாம்பழத்தை நாம் உபயோகிக்கின்றோமோ அந்தக் கொட்டையினை முளைக்க வைத்தால் அந்த மாங்கொட்டையிலிருந்து அதே விதமான மாம்பழங்களே நமக்குக் கிடைக்கின்றன.


                இதேபோல்தான் நாம் ஓர் உயர் ஜாதி வகைப் பலாப்பழத்தை உண்டுவிட்டு அந்த விதையினை முளைக்கவைத்தால் அதேஜாதிப் பலாப்பழம்தான் நமக்கு மீண்டும் கிடைக்கும். எந்தவகையான பழ வகைகளை நாம் உற்பத்தி செய்கிறோமோ அதே வகையான பழங்கள்தான் உற்பத்தி ஆகும். ஒரு மா மரத்திலிருந்து ஒரு பலாப்பழம் காய்க்காது. அதேபோல் ஒரு பலா மரத்திலிருந்து ஒரு மாங்காயோ ஒரு வாழைக்காயோ நமக்குக் கிடைக்காதுஇவைகள் அனைத்தும் தனது நியதி மாறாமல் அப்படியே இருக்கின்றன


                மனிதனின் நிலை என்னஒரு நல்ல அறிஞரிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல அறிஞர் வரவில்லையே! ஒரு நல்ல கவிஞனிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல கவிஞன் தோன்றவில்லையே! ஒரு சிறந்த விஞ்ஞானியிடமிருந்து மீண்டும் ஒரு விஞ்ஞானி தோன்றவில்லயே! அதைவிடுங்கள் மனிதாபிமானம் உள்ள மனித நேயத்துடன் கூடிய மனிதனிடமிருந்து அதே மனித நேயமும், மனிதப்பண்பும் உள்ள ஒரு மனிதன் தோன்றவில்லையே என்ன காரணம்!


                கட்டிடம் கட்டுவதற்காக சிறப்புப் பாடம் எடுத்துப் படித்த பொறியாளர் அக் கட்டிடத்தை வடிவமைக்கப் பலதரப்பட்ட யுக்திகளைக் கையாள்கிறார். கட்டிடம் செம்மையாக அமைவதற்கு நூல்பிடித்துப் பார்த்து வடிவமைக்கிறார்கட்டிடம் நேராக அமையவேண்டுமானால் நூல்பிடித்து, நூல்பிடித்து செயல்பட வேண்டும்கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்னர் ஓர் வரைபடம் தயார் செய்து வடிவமைத்துக்கொள்கிறார். வரை படம் தயார் செய்தவுடன்,  எந்த இடத்தில் கட்டிடம் எழுப்பப் போகின்றாரோ அந்த இடத்தினை நூல் பிடித்து அளந்து அளவுகளைச் சரிசெய்து கொள்கிறார் பொறியாளர்


                சாதாரணமாக கட்டிட வல்லுநர் கட்டப்போகும் கட்டிடம் ஐம்பது அல்லது அறுபது ஆண்டு காலம் வாழ்நாளைக்கு உட்பட்டதுசடமான ஜல்லி, செங்கற்களால் கட்டக்கூடியது. உயிரற்ற சடப்பொருளான சிமெண்ட், மணலால் கட்டக்கூடிய கட்டிடத்திற்கே ஒருவரை படம் தயாரித்துச் செய்கிறார். அந்த வரைபடத்தின் எல்லைக்கு உட்பட்டு நூல்பிடித்து அளவு எடுக்கிறார்.


                இப்படியாக ஒரு தையல் கலைஞர் தான் தைக்கும் துணிவகைகளுக்குத் தேவையான வரைபடத்தை வைத்துக்கொண்டு அவரும் கையில் ஒரு அளவு நூலைப் பிடித்துக்கொண்டு செயல்படுகின்றார். இதேபோல் ஜன்னல், கதவு இவைகளை எல்லாம் படைக்கும் தச்சரும் தன்னால் இயன்றளவு நூல் பிடித்து தான் செய்யும் ஜன்னல், கதவுகளைத் தயாரிக்கிறார்கள்உயிரற்ற ஜடமான பொருட்களைத் தயார் செய்பவர்கள் நூல் பிடித்து அளவு சரி செய்து தனது படைப்புகள் செம்மையாக இருக்க மிகவும் முயற்சி செய்கிறார்கள்ஒவ்வொரு கலைஞனுமே தனது படைப்புகள் எல்லாம் செம்மையாக இருப்பதற்கு நூல்பிடித்து அளவுஎடுத்துப் படைக்கிறார்கள்.


                இயற்கையின் நியதிப்படி வாழும் விலங்கினங்கள் அனைத்தும் தனது வாழ்க்கை முறையில் பெரிய மாறுதல் எதையும் சந்திப்பதில்லை. விலங்கினங்கள் பிறக்கின்றன, வாழ்கின்றன, இனவிருத்தி செய்கின்றன, செத்து மடிகின்றன, கொடிய நோய்தாக்கமான புற்றுநோய், கால் கை இழுத்துக்கொள்ளும் வலிப்பு நோய், இரத்த அழுத்தம், இதய நோய், வாத நோய்கள் இன்னும் பலவிதமான நோய்கள், இவைகள் எல்லாம் அந்த விலங்கினங்களைப் பீடிக்கவில்லை. இவற்றிற்கு எல்லாம் என்ன காரணம்? அந்த விலங்கினங்களுக்கு யாரும் போய் நோய்த்தடுப்பூசி எதுவும் போடவில்லை.  ஆனால் காட்டு விலங்கினங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து ஆரோக்கியமாக இறக்கின்றன. இதற்குக்காரணம் அவை உண்பது, உறங்குவது, இனவிருத்தி செய்வது எல்லாமும் இயற்கையின் நியதியோடு ஒத்துச்செயல்படுகின்றன. அதனால் அவற்றுக்கு அமைதியான வாழ்க்கைமுறை அமைந்துவிட்டது.


                மனிதனுக்கு மட்டும் ஏன் கொடிய நோய்த் தாக்கம் ஏற்படுகின்றதுமனிதன் மட்டும் ஏன் அல்லல்படுகின்றான்? செம்மையாகக் குறிக்கோளுடன் வாழவேண்டும் என்று மனிதன் நினைக்கவில்லை. தான் கட்டும் கட்டிடம் செம்மையானதாக இருக்கவேண்டும் என்று குறிக்கோள் உடைய கட்டிட வல்லுனரின் கட்டிடம் செம்மையானதாக இருக்கின்றதுதாம் தைக்கும் துணிமணிகள் செம்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் தையல் கலைஞன் வடிவமைப்பு செம்மையாக உள்ளது. கதவு, ஜன்னல் போன்ற பொருட்கள் வடிவமைப்பில் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்தார்கள்.


                சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் என்ன செய்தான்தனது சிந்தனையை வடிவமைக்கவில்லையே! கலைஞர்கள் தங்கள் கலைத்தொழில் சிறப்புப்பெற நூல் பிடித்தார்கள். மரம், செடி, கொடிகள் தன் இனத்திலிருந்து தன் இனத்தையே உற்பத்தி செய்தனமனிதநேயமும், மனிதப்பண்பும் உடைய மனிதன் என்ன செய்தான்? சமுதாயத்தை உருவாக்கும் உயிருள்ள மனிதனைப் படைக்கப்போகும்போது மனிதன் எந்த நூலைப் பிடித்தான். தனது குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமா? பெண்ணாக பிறக்க வேண்டுமா? அலியாக பிறக்க வேண்டுமா? அறிஞனாகப் பிறக்க வேண்டுமா? மூடனாகப் பிறக்க வேண்டுமா? சமுதாயத்தின் வளர்ச்சியில் நாட்டமுள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேரொக்க வைக்கில் நிகர் போதத்தனாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசு ஆளுமே
                                                                                                (திருமூலர்)

                இவை எல்லாம் வாசியோகப் பயிற்சியில் தேர்ந்த ஒரு குருவிடம் பயிற்சிபெற்றால் நமது விருப்பப்படி நாம் குழந்தைகளைப் படைக்க முடியும் என்கிறார் திருமூலர். அது மட்டுமல்ல, ஆண், பெண், என்ற இனப் பாகுபாடு பெண்ணினால் ஏற்படுவதில்லை என்று சமுதாயத்துக்கு விழிப்புணர்வு கொடுக்கின்றார் திருமூலர்.

ஆண் பெண் தோற்றம்
                பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை என்பது திருமூலர் வாக்கு.


ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில்
பெண்ஆகும் பூண் இரண்டு ஒத்துப்
பொருந்திடில் அலியாகும் தாண், மிகுமாகில்
தரணி முழுது ஆளும்….
                                                                                                                                (திருமூலர்)
                
திருமணத்திற்கு முன்பே நெறியான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு, திருமணத்திற்குப்பின் ஆண் பெண் இருபாலரும் கருத்து ஒருமித்து இணைந்து வாழ்ந்தால் தரணியை ஆளும் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பாடுகிறார் திருமூலர். தனக்கு என்ன குழந்தை வேண்டும் என்னும் குறிக்கோளில் ஒருமனிதன் தனது வாழ்க்கையைத் துவங்குவதாகக் கொள்வோம். குறிக்கோளில் ஒருஉறுதிப்பாடும், நம்பிக்கையும் இருந்தால், அவனால் அவனது குறிக்கோளை எட்டிவிட முடியும் என்று திருமூலர் வழிகாட்டுகின்றார்.


குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் ஒக்கில்
குழவியும்அலியாகும் கொண்ட கால்ஒக்கிலே”                                                                                                                                                                                           (திருமந்திரம்)

                வாசியோகத்தைப் பயின்று தேர்ந்த ஒருவன் புணர்ச்சியின்போது வலது கலையில் வாயுவைச் செலுத்தினால் ஆண்குழந்தை பிறக்கும்இடகலையில் செலுத்தினால் பெண்குழந்தை பிறக்கும்இப்பயிற்சியினை முறையாகப் பயிற்சிபெற்ற வாசியோகக் குருநாதர் மூலம் தெரிந்துகொண்டால் எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம்.



                சமுதாயத்திற்கு எப்படிப்பட்ட குழந்தைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்பதனை இருபதில் அறிந்தால் மட்டுமே உலகிற்கு பயன்படும் குழந்தைகளைப் படைக்கவும், உருவாக்கவும் இயலும்  அறுபதிற்குப் பிறகு இப்பாடலின் பொருள் உணா்ந்து என்ன செய்வது? அருள் அனுபவத்தைப் பெறவும், பொருள் அனுபவத்தைப் பெறவுமான குழந்தைகளைத் தோ்வு செய்வது நம்கையிலேயே உள்ளதுஇறைவனைச் சரணடைந்து அருளாளா்கள் வழி நின்றால் அடையவேண்டியதை அடைய வேண்டிய காலத்தில் அடையலாம்சிந்திப்போம்

No comments:

Post a Comment