7 June 2017

Effect of Deed - வினை பழுக்கும் காலம்

வினை பழுக்கும் காலம்

இயற்கையின் விதிமுறைகளை மீறாத அருளாளர்கள் கையில், இறைவன் தனது அருள் ஆற்றல் அனைத்தையும் அளித்து விடுகின்றார். நமது நாயன்மார்கள் சரித்திரம் நமக்கு இதை நன்கு விளக்குகின்றது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரைச் சந்திக்கவே இல்லைஆனால் அவர்; திருநாவுக்கரசரின் உழவாரத் திருப்பணி பற்றியும் மற்றும் சமணர்கள் செய்த கொலை வெறிச் செயல்களிலிருந்து இறைவனால் மீட்கப்பட்டது பற்றியும் அறிந்தார். அதனால் திருநாவுக்கரசருக்கு அமுது செய்விக்க ஏற்பாடு செய்தார்தனது மூத்த மகனை அழைத்து இலை எடுத்து வரும்படி ஏவுகின்றார்இலை அரிந்து வரச் சென்ற அப்பூதி அடிகள் மகன் அங்கு அரவம் தீண்டி இறந்தான் எனச்செய்தி அறிந்த திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனை நினைத்து உருகிப் பாடுகின்றார்.   அவரது குரலுக்கு செவிசாய்த்த இறைவன் அப்பூதி அடிகளது மகனை உயிர்ப்பிக்கின்றார்.

Effect of Deed

இயல்பாக இறந்த தொண்டனின் மகனை உயிர்ப்பித்த சீராளா்கள் பிறந்த புண்ணிய பூமி இதுதான் வாழ, கீா்த்திகள் பெற சீடா்கள் வலுவைச் சீா் குலைக்கும் தலைவா்கள் எப்படி மலிந்தார்கள்இயற்கையுடன் ஒத்து வாழ்ந்த தலைவா்களுக்கு இயற்கையே சாட்சியாக இருந்து பெயர், புகழ், செல்வம் அனைத்தும் தந்ததுஇயல்புக்கு மீறிய தலைவா்களுக்குத் தங்களது வாழ்நாளிலேயே தங்கள் மக்களாலும், மனைவியாலும் பலவிதத் துன்பங்களை அனுபவிக்கும் நிலை வருகின்றது

வள்ளுவரைப் படித்தவா்கள் தங்களது வாழ்வில் அவரது கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தாததினால் துன்பம் அனுபவிக்கின்றனா்ஒருநாளும் வாழ்வது அறியாமல் பல கோடி கற்பனைகளைக் கட்டும் தலைவா்கள் நிலையை நாம் அன்றாடம் சந்திக்கின்றோம்மருந்தின் மருத்துவக் குணம் அறியாவிடினும் மருந்து பயன் தரும்வினையும் நம்பிக்கை இல்லாவிடினும் வினை பழுக்கும் காலத்தில் அதன் பயனை ஈட்டித்தரும். 

2 comments: