14 May 2017

குறிக்கோளா? சாதனையா?



குறிக்கோளா? சாதனையா?

                குறிக்கோள் என்பது வேறு! சாதனை என்பது வேறு! குறிக்கோளையும், சாதனையையும் இன்று நாம் ஒன்றாக நினைத்துக் குழப்புகிறோம். அரைமணி நேரத்தில் இத்தனை கிலோ மீட்டர் ஓடுவது என்று நினைப்பது;  கால்மணி நேரத்தில் இத்தனை கிலோ மீட்டர் நீந்துவது என்று நினைப்பது இவை எல்லாம் ஒரு சாதனை. சாதனையையும், குறிக்கோளையும் நாம் ஒன்றாக நினைத்துக் கொள்ளக்கூடாது. குறிக்கோள் என்பது ஒரு இலக்கு நோக்கி நாம் பயணம் செய்யும்போது எந்த இடர்ப்பாடுகள் வந்தாலும் அவற்றிற்காக பின் வாங்காத ஓர் உறுதிப்பாடு

நமிநந்திஅடிகள் தீபம் ஏற்றுவது என்று ஒரு குறிக்கோள் வைத்திருந்தார். அப்பூதிஅடிகள் திருநாவுக்கரசர் திருநாமத்தின் மீது அன்பு செய்தார்.  தனது மகன் இறந்தான் என்று தெரிந்த பிறகும் நாவுக்கரசர் மீது கொண்ட அன்பும், உறுதியும் குறையவில்லை.  அடியவருக்கு அமுது செய்விப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டு நெறிநின்றார் அப்பூதிஅடிகள்.  இயற்பகைநாயனார் சிவனடியார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் இயல்புடையவர்.  இல்லையே என்னாத இயற்பகையார் தனது மனைவியையே அடியவருக்குக் கொடுத்ததுடன் தான் அந்த சிவனடியாருக்குத் துணையாக சிறிது தூரம் வரை சென்றார்.  எத்தனை இடையூறு வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் திருத் தொண்டர்கள் ஆனார்கள்

                எந்த இடர்ப்பாடு வந்தாலும் சத்தியம் தவறாமை என்னும் கொள்கையில் நின்றதால் இன்று வரை அரிச்சந்திரன் சரித்திரம் பேசப்படுகிறது. இரு மாந்தரைச் சிந்தையாலும் தொடேன் என்ற குறிக்கோளில் நெறிநின்றதால் நடையில் நின்றுயா்ந்த இராமச்சந்திரன் கதை இன்றுவரை பேசப்படுகின்றது. மருத்துவராவது, பொறியாளராவது இவையெல்லாம் கல்வி வளர்ச்சியில் நாம் சாதிக்கவேண்டிய சாதனைகள்.  கல் பொடி சாப்பிடுவது;  கண்ணாடி சாப்பிடுவது;   இரும்புத்துகள் விழுங்குவது இவையெல்லாமும் கூட மனத்தின் விசித்திரமான எண்ணங்களும், எப்படியாவது எதையாவது செய்து நாம் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்து விடவேண்டும் என்பதும்தான்.  ஆனால் இன்று நாம் இவற்றை எல்லாமும் குறிக்கோள் என்பதாகக் கொள்கின்றோம்.

                குறிக்கோள் என்பது மனித குலத்திற்கு மட்டுமல்லாமல் உயிர்க்குலம் அனைத்திற்கும் நன்மை செய்யவேண்டும் என்று நினைப்பது. யார் மனமும் புண்படாமல் நடந்து கொள்வது. இவை எல்லாவற்றையும் கடைப்பிடித்து ஒழுகும்போது அதில் ஓர் உறுதிப்பாடு கொண்டு நாம் கொண்ட கொள்கையைக் கைவிடாமல் நெறிநிற்பது.  இதுதான் குறிக்கோள் என்பது. 
                பாரதமாதாவின் மேல் கொண்ட பற்று காரணமாக நமது தேசக்கொடி கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்தாரே கொடி காத்த குமரன் உயிர் போனாலும் உயிரை விட மேலான தாய்த் திருநாட்டின் கொடி கீழே விழாமல் தனது உயிரை இழந்தாரே அதுதான் குறிக்கோள்.

                மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் ஒரு குறிக்கோளுடன் வாழ்வதாக சபதம் ஏற்போம். மனித நேயத்துடன் அனைவரையும் நேசிப்போம் என்ற குறிக்கோளுடன் நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோமாக.

4 comments:

  1. Sairam Amma. Thank you for your approach. Good thought from Amma.

    ReplyDelete
  2. Sairam Amma. Thank you for your approach. Good thought from Amma.

    ReplyDelete
  3. Sairam.Amma.Very inspiring.
    Provides clarity on goal , sadhana..
    Path and destination are normally different..
    Path of Ram ..dharma..here path and destination becomes one..
    Dharma for human being is hurt never.
    Then it is path of LOVE.
    BEST WISHES

    ReplyDelete
  4. Sairam.Amma.Very inspiring.
    Provides clarity on goal , sadhana..
    Path and destination are normally different..
    Path of Ram ..dharma..here path and destination becomes one..
    Dharma for human being is hurt never.
    Then it is path of LOVE.
    BEST WISHES

    ReplyDelete