9 May 2017

பொய்படா ஒழுக்கம்



ஒழுக்கம் என்பது விழுப்பம் தருவது. அது உயிரைவிட மேலானது என்கின்றார் திருவள்ளுவர்.  அந்த ஒழுக்கத்திலும் பொய்படா ஒழுக்கம் என ஒரு ஒழுக்கத்தைக் கூறுகிறாரே நம்வள்ளல் அது என்ன? ஒழுக்கம் என்பது ஒருமனிதனை உயர் நிலையில் நிறுத்தவல்லது.  ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும் ஒருமனிதனை அவனது எதிரிகூட மதித்துப் பாராட்டுவான்.  நெறி நின்று ஒழுக்கம் கைக்கொள்பவன் சமுதாயத்தில் வணக்கத்திற்கு உரியவன் ஆகின்றான்.  அத்தகைய ஒழுக்கத்திலும் பொய்படா ஒழுக்கம் என்று ஒரு ஒழுக்கம் பற்றிச் சிந்திக்கின்றார் வள்ளல்பெருமான்.  

                எப்போது பொய்படா ஒழுக்கம் என்ற ஒன்று உள்ளதோ, அப்போது பொய்பட்ட ஒழுக்கம் என்ற ஒன்றும் சிந்தனையில் ஊடுருவுகின்றது. துறவுநெறி என்று கூறிக்கொண்டு அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருக்கும் மக்கள் நினைவு, அவரது சிந்தனையில் ஊடுவுருகின்றது.  பொய்பட்ட தோற்றம் மாத்திரம் அல்லாமல் பொய்பட்ட விளம்பரங்கள் மூலமாகவும் மக்களை அலைக்கழிக்கும் கயமைத்தனத்தை எண்ணிப்பார்க்கின்றார்.

                அகமும், புறமும் தூய்மையுடன் வாழும் வாழ்வே பொய்படாதது.  வள்ளல் வழி நின்று சிறியன சிந்திக்காமல் வாழ்வோம்.  பொய்படா ஒழுக்கத்துடன் வாழ்வோம்.  சிந்தனை உளுத்துப் போகாமல் புரைபடாமல் வாழ்வோம். இறைவனே நமக்கு எல்லாமாக உள்ளான் என நம்புவோம்.  இறைவன் நமக்கு அனைத்துமாய் தாயாய், தந்தையாய், குருவாய், நட்பாய், சுற்றமாய் இருந்து மனநிறைவும், ஆன்ம லாபமும் தருவான்.

3 comments:

  1. எதனையும் இழப்பதல்ல ஆன்மிகம், எல்லாவற்றையும் உள்வாங்கும் நிறையனுபவமே ஆன்மிகம் these are true words amma.

    ReplyDelete
  2. பொய்படா ஒழுக்கம் படித்திருக்கிறேன். இப்பொழுதுதான் புரிந்துக்கொண்டேன். மிக்க நன்றி. சேகர்.சென்னை.

    ReplyDelete
  3. இறைவன் நமக்கு அனைத்துமாய் தாயாய், தந்தையாய், குருவாய், நட்பாய், சுற்றமாய் இருந்து மனநிறைவும், ஆன்ம லாபமும் தருவான் nice message amma

    ReplyDelete