12 May 2017

உயிரின் பயணம்

எந்த உயிரும் எத்தனை வயதில் இறக்கும் என்னும் பயணச்சீட்டின் இரகசியம் மட்டும் இறைவன் அறிந்த ஒன்றுநம் எல்லோருக்கும் பிறந்த தேதி தெரியும். ஆனால் இறக்கும் தேதி தெரியாது. அருளாளர்களுக்கு மட்டுமே அவர்கள் எப்போது இறையடி சேர்வார்கள் என்பது தெரியும்ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்தமாட்டார்கள்.


பிறப்பும் இறப்பும்

                வளர்ந்து வந்துள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு விஞ்ஞானிகள் புதிய புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்கின்றனர்வெங்காயம் உரிக்கும்போதோ அல்லது வெங்காயத்தை அரியும்போதோ அதில் உள்ள என்சைம் ஒன்று நம் கண்ணில் கண்ணீரை வரவழைக்கின்றது. வெங்காயத்தில் கண்ணீரைச் சுரக்க வைக்கும் என்சைம் எது என்று மரபணுக்களைக் கற்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள்வெங்காயத்திலிருந்து கண்ணீர்ச் சுரப்பியைத் தூண்டும் என்சைமைப் பிரித்து எடுத்துவிட்டுக் கண்ணீர்ச் சுரப்பியைத் தாக்காமல் இருக்கும் மற்ற என்சைம்கள் கொண்டு வெங்காயம் பயிர் செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்இவ்வகை வெங்காயம் சந்தைக்கு வருவதற்கு இன்னும் பத்தாண்டுகள்வரை ஆகலாம் என்றும் கூறுகின்றனர்.



                மரபணுக்களை இப்படி வகைப்படுத்திப் பிரித்து எடுத்து செடி கொடிகளின் குணங்களை மாற்றி அமைக்கலாம். ஆனால் மனிதஉடலிலும், உணர்விலும் இருந்து உயிரைப் பிரித்து எடுப்பது எப்படி?  எப்போது?  எங்கே? என்பது மட்டும் இன்றுவரை எந்த விஞ்ஞானிகளுக்கும் எட்டாத ஒரு புதிராகவே உள்ளது.




                பஞ்ச பூதங்களுக்கும், இயற்கைக்கும் முரணாகச் செயல்பட ஆரம்பித்தால் இயற்கைச் சீற்றங்களாலும், பேரிடா்களாலும் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும்.  மழையின்மை, வறட்சி, பெருவெள்ளம், காரணம் புரியாத நோய்த்தாக்கம் இவையெல்லாம் மனிதனின் இயற்கை மீறிய செயல்களினால்  சந்திக்கும் இயற்கைக்கு முரணான பேரிடா்களாம்.




     முறைசெய்து காக்கும் மன்னவன், மக்களைக் காக்காமல் சுயநலமாகச் சிந்தித்தால் சிறை சென்று தனிமையில் வாழும் நிலை ஏற்படும்.  சிந்திப்போம்! செயல்படுவோம்!

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்”                                                              
                                                                                                (குறள்)
                இறைவனுக்குச் சமமாகவே அக்காலத்தில் அரசர்கள் மதிக்கப்பட்டார்கள்.

     அதிகாரம், பொருளாதாரம் அனைத்தும் கையிலிருந்தாலும், அவ்வுயிரின் வளா்ச்சி இறை வளா்ச்சி வரை செல்லவேண்டும் என்பதே சான்றோரின் சிந்தனை. 

11 comments:

  1. "குருவே தெய்வம் தெய்வமே குரு" . மிகவும் அற்புதமான பதிவுகள் அம்மா!

    ReplyDelete
    Replies
    1. குருவே சரணம்.......

      Delete
    2. குருவே தெய்வம் தெய்வமே குரு" . மிகவும் அற்புதமான பதிவுகள் அம்மா!

      Delete
  2. "குருவே தெய்வம் தெய்வமே குரு" . மிகவும் அற்புதமான பதிவுகள் அம்மா!

    ReplyDelete
  3. Arumaiyaana karuthu amma 🙏🙏🙏

    ReplyDelete

  4. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

    ReplyDelete
  5. குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு:, குருர் தேவோ மஹேச்வர |
    குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம: ||

    தமிழில் திருமூலம் திருமந்திரத்தில்,

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,
    தெளிவு குரு உரு சிந்தித்தல்தானே!

    Abirami.S chennai

    ReplyDelete
  6. குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு:, குருர் தேவோ மஹேச்வர |
    குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம: ||

    தமிழில் திருமூலம் திருமந்திரத்தில்,

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,
    தெளிவு குரு உரு சிந்தித்தல்தானே!

    ReplyDelete
  7. அறிவி இலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மேல் நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தாய்!

    ReplyDelete