9 May 2017

கடைசி இலை


                கடைசி இலை என்னும் ஒரு கவிதை. அதில் ஒரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்அவனுக்கு முறையான சிகிச்சைஅளிக்கிறார்கள். அவன் படுத்திருக்கும் படுக்கைக்கு எதிராக ஒரு தோட்டம் உள்ளதுஅந்தத் தோட்டத்தில் ஒரு மரம் உள்ளதுஅந்த மரத்திலிருந்து இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டே இருக்கின்றது.  உதிரும் ஒவ்வொரு இலையைப் பார்க்கும் போதும் சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது.   அவனது உடல் நலனைப் பராமரித்து வரும் தாதிப்பெண் ஏன் மரத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிடுகிறாய்? என்று கேட்டாள்

                நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கின்றது என்று சிறுவன் கூறினான்ஒவ்வொரு இலை உதிரும்போதும் இனி நான் பிழைக்கமாட்டேன் என்னும் எண்ணம் வலுக்கின்றதுஇன்னும் ஓரிரு இலைகள்தான் உள்ளன அவை உதிர்ந்ததும் எனது வாழ்நாளும் உதிர்ந்துவிடும் என்றான் சிறுவன். மனத்தளவில் சிறுவன் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளான். தனக்கு வந்துள்ள நோய் தன் உயிரைக் குடித்துவிடும்இந்தக் கடைசி இலை உதிரும்போது தனது உயிரும் உதிர்ந்துவிடும் என்று நம்பினான்மரணபயம் அவனைப் பீடித்துக்கொண்டது.

                தாதிப்பெண் இவற்றை எல்லாம் பார்க்கின்றாள். மனத்தளவில் மரண பயத்துடனும், இனி பிழைக்க மாட்டோம் என்னும் எண்ணத்துடனும் இருக்கும் இவனை, எளிதில் சமாதானம் செய்ய முடியாது என்று தாதி நினைத்தாள். சிறுவன் மனத்தில் நம்பிக்கை என்னும் துளிர் விடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்தாள்சிறுவனின் ஆழ்மனத்தில் கடைசி இலை உதிர்ந்தால், தன் உயிர் பிரிந்துவிடும் என்னும் எண்ணம் வேரூன்றி உள்ளது. அதனால் கடைசி இலை உதிராமல் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைத்தாள்.

                உடனடியாகச் சிறிதும் பெரிதுமாகச் சில செயற்கை இலைகளைச் செய்து மரத்தில் பொருத்தினாள்இயற்கையாக மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்தனஆனால் செயற்கை இலை உருவாகியுள்ளதைச் சிறுவன் அறியவில்லைஇயற்கையில் மரம் துளிர்விடுவதாக நினைத்தான். தனது வாழ்க்கையும் துளிர்விடும் என்று அவனுக்கு ஆழமான நம்பிக்கை வேரூன்றியது. அதன்விளைவாக அவனது உடலிலும், உள்ளத்திலும் பெரிய மாறுதல் ஏற்பட்டதுவிரைவில் பூரணந லம் பெற்றான். அதன்பிறகு அந்த மரம் பட்டுப்போய் விட்டது என்றும்; அதில் செயற்கை இலைகள் பொருத்தப்பட்டிருந்ததையும் அறிந்தான். நம்பிக்கை ஏற்படுவதற்காகத் தாதி செய்த முயற்சிதான் செயற்கை இலை என்றும் தெரிந்து கொண்டான்.

                ஆழ்மனத்தில் தோன்றும் நம்பிக்கை ஒரு மனிதனின் உடலோடும், உயிரோடும் எத்தனை சம்பந்தப்பட்டுள்ளது என்பதை அவன் கதைமூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்இந்த நம்பிக்கையும் சாதனையும் நமது வணக்கத்திற்குரிய அருளாளர்கள் மீதும்நமது இஷ்ட தெய்வத்தின் மீதும் நாம் வைத்தோமானால், நமது உடல் பிணி மட்டுமல்லாது உயிர்ப்பிணியும், மனப்பிணியும் அகலும் என்பதில் எந்த அளவும் சந்தேகமில்லை.

                அறுவைச் சிகிச்சை மற்றும் ஹீமோதெரபி இவற்றைத்தான் வாளால் அறுத்தலும், சுடுதலும் என்றார்கள் நமது அருளாளர்கள்எத்தனை கொடூரமான முறையில் சிகிச்சை அளித்தாலும், மருத்துவனிடம் நம்பிக்கை மாறுவதில்லைஎப்படியாவது மருத்துவர் தன்னைக் காப்பாற்றிவிடுவார் என்று அவர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளான் நோயாளி. அதே நம்பிக்கையும் உறுதிப்பாடும் நமது அருளாளர்களிடமோ, அவர்களை ஆட்கொண்ட இறைவனிடமோ நமக்கு இருப்பதில்லை. இருந்திருந்தால் நமது நம்பிக்கையும்இறைவனின் கருணையும்; இறைஅடியவர்களின் அருளாசியும் நமது நோயைக் களைந்திருக்கும்.

                இளைஞா்கள் தங்களது நம்பிக்கையையும், மன உறுதியையும் வளா்த்துக் கொள்ளவேண்டும்.  தங்களது இலக்கு நிறைவேறுவதற்கு தங்களது முயற்சி இன்மையே காரணம் என்பதனை உணரவேண்டும்.  வன்முறையும், தற்கொலையுமே தீா்வு என எண்ணுவதை விடுத்தால், அவா்களது எண்ணம், சிந்தனை இவைகள் தெளிவு பெறும். தெளிந்த சிந்தனையும், நம்பிக்கையும் இலக்கை அடைய உதவும்.

3 comments:

  1. மிகவும் அருமையான கருத்து. அன்னை சகுந்தலா அவர்களின் இறை பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. Arumai Amma ....Thiruvadi saranam

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கருத்து.

    ReplyDelete