22 May 2017

Remedial Measure for Black Magic : பில்லி, சூனியம், பெரும்பகை அகல...

பில்லி, சூனியம், பெரும்பகை அகல...


மனித வாழ்வில் இன்ப துன்பங்கள் ஒரு சுழற்சியாக வருகின்றன. இவை அனைத்துமே நம்முடைய வினைப் பதிவுகளின் விளைவு.

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.     (குறள்)


இன்ப நிகழ்வுகளை இவை “எனது படிப்பினால்”, “எனது செல்வத்தினால்”, “எனது பதவியினால்” நிகழ்ந்தன என மார் தட்டிக் கொள்ளும் நாம், துன்பங்களைக் கண்டு இவையும் எனது வினைப் பதிவின் காரணமாக நிகழ்ந்தன என ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தைப் பெறவில்லை. கோள்களின் நிலைப்பாடு, செய்வினை, பில்லி , சூனியம் என புறக் காரணங்களைக் கற்பித்துத் , துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரங்களைத் தேடித் திரிகிறோம்.

பரிகாரங்கள் நமது துன்பங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவுமே தவிர, துன்பங்களிலிருந்து நம்மை முழுமையாக விடுவிக்கவல்லன, ஒரு மனிதனுக்கு, வினைப் பதிவுகளால், சுடு வெயிலில் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பரிகாரங்கள் ஒரு குடையாக அல்லது காலணியாக அந்தப் பயணத்தில் துணை புரிகின்றன. பரிகாரங்கள் மூலமாக சுடு வெயிலில் நடப்பதை முற்றிலும் தவிர்க்க இயலாது.

நாம்  நல்ல அடியவர்களா? 


வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன் ….  

எனத் துவங்கும் திருஞான சம்பந்தரின் பதிகப் பாராயணம் நவக்கிரக கோள்களினால் ஏற்படும் இடர்களைத் தவிர்க்கும் என்பது பெரும்பாலான அடியவ்ர்களின் நம்பிக்கை. ஆனால் இந்தப் பதிகத்தில் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பகுதி, ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பிள்ளை அவர்கள் குறிப்பிட்ட

“அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே”.

என்னும் சொற்றொடர்கள், “அடியார்களுக்கு மிக அதிக அளவு நன்மை பயக்கும்” என்னும் கருத்தைத் தெரிவிக்கின்றன.

எனவே நாமும் அடிப்படையில்  நம்மை நல்ல அடியவர்களாக மாற்றிக் கொள்ளும் இடைவிடா முயற்சியுடன், பரிகாரத்தைப் பின்பற்றி முழுமையான பலனைப் பெறுவோமாக!.

பில்லி ,சூனியம், நவக்கிரக கோள்களினால் வரும் இடர்கள் எனக் கருதப்படும் தருணங்களில், நமக்குத் துணை புரியும் எளிய பரிகார செயல் முறை விளக்கத்தை அன்னை நமக்காக செய்து காட்டுகிறார்கள்.





1 comment:

  1. கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண,
    இடரே பெருக்கி, ஏசற்று, இங்கு, இருத்தல் அழகோ, அடி நாயேன்?
    உடையாய்! நீயே அருளுதி என்று, உணர்த்தாது ஒழிந்தே, கழிந்தொழிந்தேன்;
    சுடர் ஆர் அருளால், இருள் நீங்க, சோதீ! இனித்தான் துணியாயே!

    ReplyDelete