3 February 2018

When is our Birthday - பிறந்தநாள் எது?


பிறந்தநாள் எது?


     ஒவ்வொரு ஆண்டும் நாம் பிறந்தநாள் கொண்டாடுகின்றோம். பிறந்தநாளை நினைத்தும் அதற்காக வாங்கும் பரிசுப் பொருள்களை நினைத்தும் மகிழ்வு எய்துகின்றோம்ஒவ்வொரு பிறந்தநாள் வரும்போதும் மெலிவொடு மூப்பும் நம்மை வந்து அடைகின்றதுநாம் எப்போது பிறந்தநாள் கொண்டாடவேண்டும் என்று அப்பர் சுவாமிகள் நமக்கு வழிகாட்டுகின்றார்.

 ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியான்                                                          (திருவாசகம்)
 
வஞ்சர் சிந்தையுள் செல்லாதான்                                                             (திருமுறை 6)   
    
     சிவபெருமான் தானே வலியப் போய் சிந்தை சேரக்கூடியவன்நாமாக அவனைச் சிந்தையில் சேர்த்துக் கொள்ளமுடியாது. அவனாக நம் சிந்தையுள் புகவேண்டுமானால்

சேரக்கருதிச் சிந்தனையைத்    
திருந்தவைத்துச்  சிந்திமின்;                                                                            (திருவாசகம்)

                                     
     என்று சிந்திக்க வேண்டும். சிந்தனையுள் வஞ்சனை இருந்தால் இறைவன் சேரமாட்டான். அப்படி இறைவன் சேர்ந்துவிட்டால் அவர்கள்தான் கற்றவர்கள். கற்றவர்கள் என்றதும் ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தில் நாம் எம்.. பி. என்றோ வேறு ஏதேனும் பட்டமோ பெறவேண்டும் என நினைக்கின்றோம்ஆனால் இறை உணர்வு பெறக்கூடிய கல்விதான் கல்வி என்கின்றார் திருநாவுக்கரசர்.

கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த வேண்டும் என்று நினைக்கும் கல்விதான் கல்வி.
திரு நாமத்தையோ
திருக்கோவில் வழிபாட்டையோ மேல் எழுந்த வாரியாக உள்ளம் பற்றாமலும் உணர்வுகள் பற்றாமலும் செய்தால் அது கல்வியாகாதுஆகையால் இறைவனை கருதி ஏத்த தெரிந்தவர்களே பிறந்தவர்கள்.                                                       

     நாமும் மாதம் இருமுறை பிரதோச வழிபாடு செய்கின்றோம். இன்னும் ஊடகங்கள் என்ன என்ன விரதம் அனுசரிக்க வேண்டும் என்று கூறுகின்றதோ அவை எல்லாம் அனுசரிக்கின்றோம்ஆனாலும் நாம் எதிர்பார்த்த பலன் ஒன்றும் கை கூடவில்லையே என்ன காரணம்?

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
                     (பெரியபுராணம்)

     நாம் ஓதுகின்றோம். கருதி ஓதினோமா? உணர்ந்து ஓதினோமா? என்பது கேள்விக்குறி. அதனால் நாவுக்கரசர் நம்மைப் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சில தகுதிகளை வளர்த்துக் கொள்ளும்படிக் கூறினார்.

கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப்
 பெற்றவர் பிறந்தார் மற்றும் பிறந்தவர் பிறந்திலரே        
                                           (திருமுறை 6)    
         
செத்தாருள் வைக்கப் படுவர்                                                                                    (குறள்)

     இறை ஆற்றல் பெறுவதற்கு முயற்சி செய்யாதவர்கள், அறச்செயல் செய்வதற்கு ஒருப் படாதவர்கள் பிறந்தவர் பிறந்திலரே என்றார். இவர்கள் எல்லாம் பிறந்தவர்கள் அல்ல் இறந்தவர்கள்தான் என்கின்றார். கடினமான சொற்களைப் பயன்படுத்தாத திருநாவுக்கரசரே செத்தாருள் வைக்கப்படுவர் என்கின்றார்.

     இறையனுபவத்தை உணரும் நாள் பிறந்த நாள்அதனைப் பேசிப் பகிர்ந்து கொள்ளும் நாள் பிறந்த நாள்ஏனைய நாட்கள் பிறவா நாட்களே!!

No comments:

Post a Comment