14 August 2018

Gurukul - குருகுலம்


குருகுலம்

குருகுலத்தில் நிறைய மாணவர்கள் பாடம் பயின்றனர்.  இல்லற தர்மத்தை ஏற்கப்போகும் சீடர்கள்;  துறவற தர்மத்தை ஏற்கப்போகும் சீடர்கள் என்று சீடர்கள் பல வகைகளில் பிரிக்கப்பட்டு அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு அவரவர்களுக்குப் பாடபோதனை செய்தார் குருநாதர்.  துறவு மேற்கொள்ளும் சீடர்கள் வி~யத்தில் மிகவும் கவனம் செலுத்தினார் குருநாதர்.


     துறவு என்பது மிகவும் புனிதமானது. யாருடைய நிர்பந்தத்திற்காகவும் துறவை நாம் மேற்கொள்ளக்கூடாது. குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகவோ , சோம்பல் காரணமாகவோ  ஒருவன் துறவு மேற்கொள்ளக்கூடாது.  இயலாமை காரணமாகவோ , நோய்வாய்ப்பட்டோ இருக்கும் நிலையினில் தோன்றும் சலிப்புத் தன்மையை துறவு என்று கருதக்கூடாது.  துறவு என்பது ஒரு புனிதமான வாழ்க்கை நெறி.  அதனால் துறவு மார்க்கம் செல்ல விரும்பும் சீடர்கள் தனது சொந்த பெற்றோர் , சொந்த சகோதரர் ,  சகோதரி இவர்களிடம் கூட நெருக்கம் வைத்துக்கொள்ளக் கூடாது. 

     எந்த நேரத்தில் உணர்ச்சிகள் நம்மை எவ்வாறு அலைக்கழிக்கும் என்று கூறமுடியாது எனத் தான் உணர்ந்ததை தனது சீடர்களுக்கு உணர்த்திப் பாடம் நடத்தினார் குருநாதர். துறவு மேற்கொள்ளும் சீடர்கள் உடல் அளவில் மட்டுமல்லாது மனத்தளவிலும் துறவு நிலையில் வாழவேண்டும் என்று அறிவுரை கூறினார் குருநாதர்.  தினமும் ஒவ்வொரு அடியவர்கள் கதையை மேற்கோள்காட்டி பாடம் நடத்தினார்.


     குருகுலத்தில் பாடம் நிறைவுபெற்றது.  இறைஉணர்வுடன்  இருக்கும்படியும்; வெளிமுகச் சிந்தனைகளில் மனத்தை அலைக்கழிக்க வேண்டாம் என்றும் சீடர்களைக் குருநாதர் கேட்டுக்கொண்டார். தீவிர பக்தியும் , இறைஉணர்வு பெறுவதில் வேட்கையுமுடைய சீடர்கள் அனைவரும் மிகுந்த பயத்துடன் குருவின் திருவடி பணிந்து நாங்கள் தவறு செய்யாமல் திருத்திப் பணிகொள்ள வேண்டியது தங்களது கடமை என்று குருவிடம் சரணாகதி அடைந்து விடைபெற்றுக் கொண்டார்கள்.  அவர் அவர்கள் தனித்தனியாகச் சென்று தங்களது பயிற்சியைத் துவங்கினார்கள்.  ஒரே ஒரு சீடன் மட்டும் இவர்கள் தேவை இல்லாமல் கவலைப் படுகிறார்கள். எனக்கு என்மீது நம்பிக்கை உள்ளது. சாதனை செய்யும் சாதகர்கள் சொந்தத் தாய் தந்தையரிடமும் , சகோதர சகோதரியிடமும் இனக்கவர்ச்சி காரணமாக விலகி இருக்கவேண்டும் என்று கூறுவது மிகவும் தவறு.  தேவை இல்லாமல் குருநாதர் தானும் பயந்து , சீடர்களையும் பயப்பட வைக்கின்றார் என்று நினைத்தான்.  அதை தனது சக சீடர்களிடமும் தனது குருநாதரிடமும் கூறினான்.  பிறகு தானும் தனது பயிற்சியை மேற்கொள்ள தனி இடம் அமைத்துச் சென்றுவிட்டான்.  எல்லாச் சீடர்களும் தனது பயிற்சிகளை எல்லாம் வழக்கம்போல் செய்து வந்தனர்.  அவ்வப்போது குருதேவரிடம் சென்று சந்தேகம் கேட்டு ஆசி பெற்றும் வந்தனர். 

     தேவை இல்லாமல் பயப்படக்கூடாது என்று கூறிய சீடனும் தனது பயிற்சியைச் செவ்வனே செய்துவந்தான்.  ஒருநாள் அவன் பயிற்சி முடித்து தனது குடிலுக்குள் வந்தான் மழைபிடித்துக்கொண்டது. மிகவும் பலத்த மழை.  வெளியில் நின்று மழை பெய்வதை ரசனையுடன் பார்த்தான். இறைவன் ஒவ்வொரு உயிர்களிடம் காட்டும் கருணை எவ்வளவு புனிதமானது.  அதை நாம் யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்றவாறு சிந்தித்தான்.  பின் தனது குடிலிற்குள் வந்து தியானம் செய்தான்.  சற்றுநேரம் கழிந்தது.  சீடன் தியானம் கலைந்து வெளியே வந்தான். 

     வெளியில் தனது தவக்குடிலிற்கு அருகில் ஒரு மாது மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றான்;. பெண்ணே மழை பெய்கின்றது  உள்ளே வா என்று அழைத்தான். பெண் வர மறுத்தாள். ஆபத்திற்குப் பாவமில்லை.  துறவுநிலை மேற்கொள்ளும் சாதகன் வசிக்கும் தனி அறைக்கு பெண்கள் நுழையக்கூடாதுதான். ஆனால் அவசியம் ஏற்பட்டால் அதனால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என்று சீடன் கூறினான். அந்தப் பெண் மிகவும் தயக்கத்துடன் உள்ளே சென்றாள். மீண்டும் மழை பிடித்துக்கொண்டது. ஈரத்துணியில் அந்தப்பெண் நடுங்கிக் கொண்டிருந்தாள். சீடன் மிகவும் இரக்கப்பட்டான்.  குளிர்காய்வதற்காகச் சில சுள்ளிகளைப் போட்டு நெருப்பு மூட்டிக் கொடுத்தான்.  மீண்டும் மழையை வேடிக்கை பார்க்கக் குடில் வாசலுக்கு வந்துவிட்டான்.


     குளிரால் பாதிக்கப்பட்ட பெண் நெருப்பு காய்ந்ததும் , தனது புடவையை எடுத்து நெருப்பு வெம்மையில் சூடேற்றினாள்.  தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான் சீடன்.  ஒரு பெண் தன் கண் எதிரே சேலையை உலர்த்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஒரு கணநேரத்தில் நிலைதடுமாறி மனம் குலைந்தான்.  வேகமாக ஓடிச்சென்று அந்தப் பெண்மணியைக் கட்டி அணைக்க மனத்தளவில் ஓடிவிட்டான்.


     குருநாதரின் உபதேசம் காதில் விழுந்தது.  எத்தனை முறை குருநாதர் படித்துப் படித்துக் கூறினார். ஒரு கணநேரத்தில் நம்மை இழந்துவிட்டோமே!  எத்தனை அறியாமை! குருவை நினைத்து அழுதான்;. தனது பாவத்திற்குப் பிராயச்சித்தம் என்ன? என்பது பற்றிச் சிந்தித்தான். குருநாதர் இவன்;முன் தோன்றினார். காமம் கடத்தற்கு அரியது. அதனால்தான் ஆத்ம சாதகர்களை உடன் பிறப்புகளிடம் இருந்தும்ää பெற்றோரிடமிருந்தும் சில அடிகள் இடைவெளி விட்டுப் பழகும்படி அருளாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இதுபற்றிக் கவலைப்படாமல் எச்சரிக்கை உணர்வுடன் உனது சாதனைகளை மீண்டும் செய்துவா என்று பணித்தார்.

No comments:

Post a Comment