6 August 2018

உணா்வு பேசும் சேவை - Thirunavukkarasar's Satyagraha

உணா்வு பேசும் சேவை


திருவாவடுதுறையிலிருந்து திருநாவுக்கரசர் பழையாறை சென்றார்.  பழையாறையில் உள்ள சிவன்கோவிலை மறைத்து சமணர்கள் கோவில் கட்டியுள்ளதாக ஊர்மக்கள் கூறினார்கள்.

நம்பும் என் சிந்தை நணுகும் வண்ணம் தன்;பொருட்டு இறைவன் செய்த திருக்கருணையை திருநாவுக்கரசர் நன்கு உணர்ந்திருந்தார்ஆனால் தோன்றி மறையும் அதிசயத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் எக்காலத்திலும் இருப்பார்கள் என்பதை திருநாவுக்கரசர் அறிந்தே வைத்திருந்தார்.  இங்கு இருந்த சிவன் கோவிலை சமணர்கள் மறைத்து விட்டனர்எங்கள் ஊருக்கும் இறைவன் ஒரு அதிசயம் நடத்தட்டுமே என நினைத்தார்கள் மக்கள்.



     சமணர்கள் கோவிலாக இருந்தாலும், சைவர்கள் கோவிலாக இருந்தாலும், இறையாற்றல் என்பது ஒன்றே ஒன்றுதான்.  இறைவன் பலவாக இருக்கமுடியாது.  இறைவனிடமிருந்து வரும் ஒளிக்கற்றைகளைத் தடுத்துத் தங்கள் பக்கம் மறைத்துக் கொள்வதற்கு ,  இந்த ஒளிக்கற்றைகள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்துள்ள மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒளிக்கற்றைகள் அல்லவேஒளிக்கற்றைகள் மொபைல் சர்வீஸில் மிகப்பெரிய பங்கு வகிப்பதால் , புதிய யுக்திகளைப் பயன்படுத்தும் நிறுவனம் தங்கள் சேவைமூலம் உலகப் புகழும், பொருளாதார மேம்பாடும் அடையவேண்டி ஒளிக்கற்றைகளை அளவுக்கு அதிகமாக தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்கின்றனபிறகு ஒளிக்கற்றைகளை அளவிற்கு அதிகமாக வைத்திருப்பவர்களிடமிருந்து பிற நிறுவனங்களும் , அரசு அதிகாரிகளும் கையகப்படுத்துவார்கள்.

     பரம்பொருளின் ஒளிக்கற்றையினை அப்படி யாராவது சுயநல நோக்கோடு தக்கவைத்துக் கொள்ளமுடியுமாஅப்படி தக்க வைத்துக்கொண்டால் , இறைவனது பேரண்ட ஆற்றலின் விரிந்து பரந்துபட்ட தனித்தன்மைக்குக் களங்கம் கற்பிப்பதாகும்பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்த இந்தப் படர் ஒளிப்பரப்பு, கைபேசி சேவையில் பயன்படக்கூடியது அல்லவே.   

     மனம் பேசும் சேவையிலும், உயிர் பேசும் சேவையிலும், உணர்வுகள் பேசும் சேவையிலும் பயன்படக்கூடியது செம்பொற்சோதிபிரமிப்பூட்டும் மனிதப் படைப்புகள் செய்யும் அற்புதங்கள் அனந்தம் கோடிஆனால் அந்த மனிதனையும் அவனது அறிவுத் திறனையும் படைக்கக் கூடியவன் இறைவன் மட்டுமேவிஞ்ஞான வளர்ச்சி எத்தனை வேகமாக வளர்ந்தாலும் அந்த விஞ்ஞானத்தால் ஒரு உயிர் அணுவை உற்பத்தி செய்யமுடியாதுஒரு சொட்டு செயற்கை இரத்தத்தையும் உற்பத்தி செய்யமுடியாது.  மனமும் உணர்வுகளும் தொழிற்பட்டு தலைநிற்கும் அன்பர்களுக்கு அருள் அளிக்கும் தேசவிளக்கு இறைவன் என்பதனை நாவரசர் தன் அனுபவத்தில் உணர்ந்தார்.


      
சத்தியாக்கிரகம்

சமணர்கள் பழையாறை வடதளியில் சிவபெருமானை மறைத்து விட்டார்கள் என்பதால் அவர் திருவுருக்கண்டு செல்லவேண்டும் என்று அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்தார் அப்பர் சுவாமிகள்தன்னுடைய குழந்தை பசியால் வாடுவது கண்டு பொறுக்காத பரமன் மகேந்திரபல்லவன் கனவில் தோன்றி பழையாறை வடதளியில் உள்ள கோவிலைத் திறக்கச் செய்தார்.

தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
 நிலையினால் மறைத்தான் மறைக்க ஒண்ணுமோ
 அலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினான்அடியேநினைந்து உய்ம்மினே
                                                                                                                          (
திருமுறை 5)

     தலைமுடியினைத் திருத்தம் செய்வதற்குரிய கருவிகளைப் பயன்படுத்தினால் கூட அதனால் சில உயிர்கள் வதைபடலாம் என்னும் எண்ணத்தில், தலையில் உள்ள மயிர்களைக் கருவிகள் கொண்டு சுத்தம் செய்வதில்லை சமணர்கள்.  ஆனால் அப்படி ஒரு உயிருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது என்னும் கொள்கை உடைய சமணர்கள், இப்படி பழி பாவத்திற்கு அஞ்சாமல், சமயத்தின் பெயரால் கொலை செய்கிறார்களேஎன்று மனம் வருந்தினார் திருநாவுக்கரசர்.  அன்பினால் இறைவனைக் கட்டலாமே தவிர, வேறு எதனாலும் அவனை மறைக்க முடியாதேஎன்று நினைத்தார்இறைவனும் மகேந்திரபல்லவன்மூலமாக திருநாவுக்கரசருக்குப் பழையாறை வடதளியில் காட்சி கொடுத்தான்.


பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
 படர்ந்ததோர் படரஒளிப்பரப்பு
                                                                                                                         (
திருவாசகம்)




     அண்ட ஆற்றல் முழுவதிலும் பரவியுள்ள ஒளிக்கற்றைகளை யாரும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவோ மூடி மறைத்துக்கொள்ளவோ செய்ய முடியாது என்பது திருநாவுக்கரசருக்கும் நன்றாகத் தெரியும் அவ்வூர் மக்கள் விரும்பியபடி இறைவனைப் பழையாறை வடதளியில் கண்டு வணங்கினர்.

No comments:

Post a Comment