1 October 2017

The Almighty as a Guru -தானே வந்து எம்மைத் தலை அளித்தருளி


தானே வந்து எம்மைத் தலை அளித்தருளி

திரு.டிக்கன்ஸன் என்பவர் பரமஹம்ச யோகானந்தரின் சீடர். அவர் பரமஹம்ச யோகானந்தரால் அமெரிக்காவில் நிறுவப்பட்ட யோகதா சத்சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்ஒவ்வொரு வருடமும் யோகதா சத்சங்கத்தினர் டிசம்பர் 23ம் தேதி அன்று கூட்டுத் தியானப் பயிற்சியாக, எட்டு மணிநேரம் பயிற்சி செய்வார்கள்பிறகு கிறிஸ்துமஸ் பரிசு வழங்குவார்கள்.

                இந்தியாவிற்கு மீண்டும் வந்துவிட்டுச் சென்ற யோகானந்தர் இந்தியாவில் உள்ள கலைநயம் மிக்க பொருட்களை கிறிஸ்துமஸ் பரிசு வழங்குவதற்காக வாங்கிச்  சென்றிருந்தார். 1936 ஆம் ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் யோகானந்தர் கலந்து பரிசு வழங்கினார்.

                திரு. டிக்கன்சனுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணத்தைப் பரமஹம்சர் பரிசாக அளித்தார்இறைவனுடைய படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே மனித இனத்திற்கு வழங்கப்படும் பரிசுகள்தான். அப்பரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இறைவனுக்கு செலுத்தும் நன்றிதான் விழாக்காலக் கொண்டாட்டங்கள்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் இறைவனுக்காக நன்றி செலுத்தப்படவேண்டியது இருக்க விழாக்காலங்களிலாவது இறைவனை நினைப்பதற்கான ஒரு வழிதான் பண்டிகை நாட்கள்.

                பரமஹம்சரிடமிருந்து, வெள்ளிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட டிக்கன்சன் தன்னை மறந்தார்அந்த வெள்ளிக் கிண்ணம் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சியை நினைவுபடுத்தியதுதானே வந்து தலை அளித்தாண்ட குருவின் பாதம் பணிந்தார்.

                நெப்ராஸ்காவில் உள்ள 15 அடி ஆழமுள்ள குளத்திற்கருகில் டிக்கன்சனும் அவரது சகோதரரும் விளையாடிக் கொண்டிருந்தனர்விளையாட்டின் வேகத்தில் டிக்கன்சனை சகோதரர் தள்ளிவிட்டார்டிக்கன்சன் குளத்திற்குள் விழுந்துவிட்டார்அப்போது அவருக்கு ஐந்து வயதே நிரம்பி இருந்தது.

                தண்ணீருக்குள் டிக்கன்சன் முழுகிக் கொண்டிருந்தார். அவரைத் தண்ணீருக்கு அடியில் மூழ்கவிடாமல் பல வண்ண நிறங்களில் ஜொலிக்கும் ஒரு ஒளி வெள்ளம் பாதுகாப்பதாக உணர்ந்தார்அந்த ஒளி வெள்ளத்தின் மத்தியில் நம்பிக்கை அளிக்கும் புன்னகையுடனும், சாந்தமான கண்களுடனும் கூடிய மனித உருவம் தனது முழு ஆற்றலையும் செலுத்தி தன்னைப் பாதுகாப்பதாக அவர் உணர்ந்தார்டிக்கன்சனின் சகோதரரின் நண்பர்கள் அங்கிருந்த ஒரு அலரி மரத்தினை வளைத்து தண்ணீருக்குள் அமிழ்த்தினர்டிக்கன்சனை அந்த மரத்தின் கிளையினைப் பிடித்துக் கொள்ளும்படியாகக் கூறினர்எப்படியோ அவ்வொளி வெள்ளத்துள் அழுந்திய அந்த தெய்வத் திருவுருவின் அருளால் நண்பர்கள் டிக்கன்சனைக் காப்பாற்றினர்.

                பன்னிரண்டு வருடங்கள் கழித்து டிக்கன்சன் சிகாகோவிற்குச் சென்றார்அப்போது அவருக்கு வயது பதினைந்து. 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக சர்வ மத மகாசபைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. டிக்கன்சனும் அவரது அன்னையும் சிகாகோவின் ஒரு முதன்மைச் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது நீரில் மூழ்கும்போது ஐந்து வயதில் கண்ட அதே சக்தி வாய்ந்த ஒளி வீச்சைக் கண்டார்உடனே தாயாரிடம் அம்மனிதரை அடையாளம் காட்டினார்.

                சுவாமி விவேகானந்தர்தான், டிக்கன்சன் ஒளிவடிவில் கண்ட மகான்பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க சிகாகோ கலை அரங்கில் மீண்டும் அவரைப் பார்க்கவும் அவரது அருள் சொற்பெருக்கைக் கேட்கவும் இறையருள் கூட்டுவித்தது.

                சொற்பொழிவு முடிந்ததும் டிக்கன்சன் சுவாமிஜியைக் காண அவர் அருகில் சென்றார்இந்தியச் சாதுவிடம் தனது உணர்ச்சிகளை எப்படி பரிமாறிக்கொள்வது என்பது அவருக்குப் புரியவில்லைஇருந்தாலும் அவரே தனக்கு ஞான குருவாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று நினைத்து அவரது அருகில் சென்றார்.

                ‘சர அசர உயிர்தோறும் சாற்றிய பொருள்தோறும் விராவியுள் விளங்கும் வித்தகமணியானஞானகுரு டிக்கன்சன் மனத்தினுள் என்ன எண்ண ஓட்டம் ஓடுகின்றது என்பதைப் புரிந்துகொண்டார்மகனே நான் உனக்குக் குரு அல்ல. உனது குருவும் இந்தியாவிலிருந்தே வருவார்அவர் உனக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் பரிசாக அளிப்பார்அவர்தான் உனது குரு என்றார்அந்த 1893 ம் ஆண்டுதான் பரமஹம்ச யோகானந்தர் பிறந்த ஆண்டு. அத்துடன் தண்ணீரை விட்டு எப்போதும் சற்று விலகியே இரு என்றும் சுவாமிஜி அறிவுரை கூறினார். சில நாட்கள் டிக்கன்சன் சிகாகோவிலிருந்துவிட்டுப் பிறகு, தனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்அதன்பிறகு அவர் சுவாமிஜியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

                கி.பி. 1893 இல் நடந்த இந்நிகழ்விற்குப் பிறகு இறைவனிடம் டிக்கன்சன் தனது குருவை எப்போது அனுப்புவாய் என்று அடிக்கடி பிரார்த்தனை செய்வார்.  1925 ஆம் வருடம் ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து இறைவனிடம் வேண்டினார். இறைவா! எனது குருவை விரைவில் என்னிடம் அனுப்பிவை என்பதாக அவரது பிரார்த்தனை இருந்தது.

                மறுநாள் இரவு ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரைச் சந்திக்கவும், அவரது சொற்பொழிவைக் கேட்கவும் செய்தார். அதுதான் தனது குருநாதர் என்று தெரிந்து கொண்டார்ஆனால் அப்போது யோகானந்தர் எந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொடுக்கவில்லை. ஆனாலும் டிக்கன்சனது உள்ளுணர்வு யோகானந்தர்தான் தனது குரு என்று அடிக்கடி உணர்த்திக்கொண்டு இருந்தது. யோகானந்தரிடம் முறையாக கிரியா யோக தீட்சை பெற்றுக்கொண்டார். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுவாமி விவேகானந்தர் கூறிய அதே வெள்ளிக் கிண்ணத்தை பரமஹம்சர் டிக்கன்சனிடம் வழங்கினார்சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து நாற்பத்து மூன்று ஆண்டுகட்குப் பிறகு அந்த வெள்ளிக் கிண்ணம் டிக்கன்சனுக்குக் கிடைத்தது.

                ஆத்மஞானம் பெறவேண்டும் என்று விரும்பும் தொண்டர்களுக்கு இறைவனே குருநாதராக வருகின்றார்காலம், தேசம், மொழி இவைகளைக் கடந்து குருநாதர் அருள் செய்கின்றார்.


3 comments: