24 October 2017

Do we enjoy all our possession? வகுத்தான் வகுத்த வகையல்லால் ....


வகுத்தான் வகுத்த வகையல்லால் ...

1.   "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" - குறள்


பல கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருந்தாலும் அனுபவிக்க வேண்டும் என்னும் விதி இருந்தால் மட்டுமே அனுபவிக்க இயலும். நம் நாட்டில் நமது கிராமத்தில் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் விளையும் காய்,கீரை,கிழங்கு ,பழவகைகள் அனைத்தும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் விளங்குகின்றது. இயற்கைக்கு மாறான உணவு வகைகளை தேர்ந்தெடுக்கும் போது , அவைகளே நமது உடலிற்கும், மனதிற்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தி மனஉளைச்சலையும்,உடல் நோவையும் தருகிறது.
2.    பேராசை வயப்பட்டு,கோடி, கோடிக்கு மேல்கோடி என்று சேர்க்கும் பணத்தை, அனுபவிக்கும் பேறு உள்ளவர்கள் மட்டுமே அதை அனுபவிக்க இயலும். அல்லது அவர்கள் விரும்பி உண்ணும் இட்லி,சாம்பார், இடியாப்பம்,குருமா இவைகளுக்குப் பதிலாக கூழ் சாப்பிடும் சூழல் உருவாகும். துய்த்தல் என்னும் பதத்தை, அனுபவித்தல் என்னும் பொருளில் வள்ளுவர் பயன்படுத்துகின்றார்.

3.    கோடிபணம் தொகுத்தவர்கள் ஒரே நேரத்தில் நான்கு கட்டிலில் படுத்துக்கொள்ள முடியாது .சுவையான உணவு என்பதால் இரு வேளைக்குச் சேர்த்து , ஒரு வேளைக்கே எடுத்துக்கொள்ள முடியாது .தொகுத்து வைத்த பொருள் ,நம் குழந்தைகளுக்கு ஆகும் என்றால் நம் கண் முன்னாலேயே அக்குழந்தைகள் மரண வேதனைக்குச் சமமான நோயை அனுபவித்து வருகிறார்கள். குடும்பமே ஒற்றுமையின்றி அவதிப்படுகின்றது.கோடி தொகுத்தாலும் துய்த்தல் அரிது என்பது பொன் எழுத்தில் பொறிக்கப்படும் வார்த்தைகள்.

4.     வைரம், வைடூரியம் என பல கோடியில் நகை வாங்கி வைத்துள்ளோம். அவைகளைப் போட்டு அழகுபார்பதற்குக் கணவன், மனைவியரிடை ஒற்றுமை இல்லை. வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை. வெளியில் அணிந்து சென்றாலும் பாதுகாப்பில்லை. கோடி தொகுத்து என்ன பயன்?
மிகச் சாதாரண குடும்பத்து மக்களும் 40 பவுன் நகை சேர்த்து விடுகிறார்கள் .தங்கத்தில் உள்ள உலோகச்சத்து, சில மனநோய்களுக்கும், சில உடல் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.அதனைப் பயன்படுத்துவது திருமணம் மற்றும் வீட்டில் உள்ள விசேச நாட்களில், ஒருவருக்கொருவர் மனம் ஒன்றி வாழ்வதற்காகவே. ஆனால் இன்று அனைத்து நகைகளையும் துய்க்கும் பேறு பேங்க் லாக்கருக்கே உள்ளது.ஜடமான வங்கிப்பாதுகாப்புப் பெட்டகம், வைர வைடூரியங்களைச் சுமந்து நிற்கிறது .

கோடி தொகுத்தவர்களின் நிலை? 



நகை வாங்கும் வசதி இல்லாதவர்கள் கூட அக்காலத்தில் திருமணம் ,சீமந்தம்,பூப்பெய்தல் போன்ற காலங்களில் உறவினர்களிடம் நகை வாங்கி அணிந்து கொள்வார்கள் .தங்கத்தின் மருத்துவ குணம்,மன நலம் பேணல் மற்றும் மங்கலச் சின்னம் என்று அதற்கான மதிப்பீடு மக்கள் மத்தியில் பரவலாகத் தெரிந்திருந்தது.தற்போது மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.ஆனால் தங்கம் எதற்கு அணிகிறோம் என்பது புரியவில்லை . வாங்கி வந்த நகைகள் தங்களது உறவினர்களிடம் பெருமையாகப் பேசுவதற்கும்,ஆர்ப்பாட்டமாகக் காட்டுவதற்கும் பயன்படுகிறது. திருமணத்திற்காகப் பல லட்சங்கள் செலவு செய்து நகை வாங்குகின்றார்கள். அந்த நகையினை அணிந்து கொண்டு மங்கலமாக அனுபவிப்பதற்கு மணப்பெண்ணிற்குக் கொடுத்து வைக்கவில்லை. வாங்கிய பட்டுப் புடவைக்குப் பொருத்தமாகப் பித்தளை, இரும்பு, வெள்ளி இவைகளில் பொருத்தப்பட்ட கல்நகைகளை அணிந்து கொள்கிறார்கள். கோடி தொகுத்தும் அனுபவிக்க இயலவில்லை ?

 –தொடரும்.

No comments:

Post a Comment