6 October 2017

Guru's Kindness - கருணை எனும் குரு

கருணை எனும் குரு



பரமஹம்ச யோகானந்தர் தான் ஆத்மசாதனையில் முன்னேற வேண்டும் என விரும்பினார். அவருடைய நண்பர், ராம்கோபால் என்னும் ஒரு தூக்கமற்ற மகானைச் சந்தித்தது பற்றியும், அவர் ஆன்மீக ஆற்றலின் மொத்த வடிவம் என்பது பற்றியும் அடிக்கடி பரமஹம்சரிடம் கூறுவார். யோக நிலையில் முழு அனுபவம் பெற்ற மகாயோகி அவர் என்றெல்லாம் குருவின் பெருமையினைப் பேசிக்கொண்டே இருந்தார். அவரிடம் பேசப்பேச அந்த மகா யோகியைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார் பரமஹம்சர்.


                ஒருநாள் அவர் எங்கு இருக்கிறார் என்பதனை உத்தேசமாகத் தெரிந்துகொண்டு, அவரைப் பார்க்கச் சென்றார் யோகானந்தர்வழியில் தாரகேஸ்வரம் என்னும் ஊர் வழியாக வருகிறார். அங்குள்ள புகழ்பெற்ற திருக்கோயில் வந்து சேர்ந்தார். இந்தக் கற்சிலையினால் நமக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகின்றது என்று நினைத்தார்.


                பின்னர் தான் தேடிவந்த குருவைப் பார்ப்பதற்குச் செல்கிறார். தெருவில் போவோர், வருவோர் அனைவரிடமும் வழிகேட்டுவிட்டுப் பின் தாம் போகவேண்டிய திசையிலிருந்து நேர் எதிர்த்திசையில் 10 மணிநேரம் நடந்து வந்துவிட்டார். அதன் பிறகு பாதை தெளிவாகத் தெரிந்த ஒரு குடியானவனிடம் மகானைப் பற்றி விசாரிக்கின்றார். குடியானவன் அன்புடன் வீட்டிற்கு அழைத்ததும் செல்கின்றார். அவர் வீட்டில் தங்கி, இரவு உணவு முடித்துக்கொள்கின்றார். பின் அங்கிருந்து அதிகாலையில் ராம்கோபால் மஜும்தாரைச் சந்திக்கச் செல்கின்றார்பத்து மணிநேரம் நடந்து வந்த பாதையில் மீண்டும் திரும்பிச் செல்லப் பணிக்கின்றான் குடியானவன்


                காலையிலிருந்து நண்பகல் 12 மணிவரை நடக்கின்றார் பரமஹம்சர்எதிர்பாராத விதமாகத் தான் தேடி வந்த குருவே இவர் எதிரில் தோன்றுகின்றார்மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும். ‘சின்ன ஐயாநமது மலம் சோறும் ஒன்பது வாயில் கொண்ட இந்த உடம்பிற்குள் சிவன் உரையும்போது தாரகேஸ்வரம் திருக்கோவிலில் சிவன் இருக்கமாட்டாரா? என்று வினவுகின்றார்இதைக் கேட்டதும் மிக்க அதிர்ச்சி அடைகின்றார் யோகானந்தர். எப்படி இவருக்கு இவை எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றார்பின் அவரே யோகானந்தரைத் தனது யோக சாலைக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவு தயாரித்துக் கொடுக்கின்றார். பின் இருவரும் தியானம் செய்கிறார்கள்.


                உறக்கமற்ற அந்த மகான், தான் 48 ஆண்டுகளாக ஒரு நாளைக்குப் 18 மணிநேரம் வரை பயிற்சி செய்ததாகவும் அதன்பிறகு செம்மையே ஆய சிவபதம் பெற்றதாகவும் கூறுகிறார். யோகானந்தர் தனக்கும் அவ்விதமான யோக நிலைகளைக் கற்றுத் தருமாறு வேண்டுகின்றார்ஒரு குருநாதர் எல்லா உயிருக்கும் குருநாதராக அமையமுடியாது எனறும்; ஸ்ரீ யுக்தேஸ்வரர் மூலம்தான் நீ முழுநிலை பெறுவாய் என்றும்; அவர் மூலமாக இந்தக் யோகக்கலை உலகம் முழுவதும் பரவும் என்றும் அறிவுறுத்துகிறார்.


பால் நினைந்தூட்டும் தாய்



                நான் எனது என்பதைக் கடந்த மகான்கள், தான்தான் பெரியவர் என்றோ, தன்னால்தான் இதைச் சாதிக்கமுடியும் என்றோ ஒரு போதும் எண்ணுவதில்லைமேலும் ஒரு உயிர் யார் மூலம் எப்போது எங்கேதன்னை உணர்தல்என்னும் பேரானந்த நிலை பெறமுடியும் என்பது எல்லாம் எத்தனை கணினிகள் வளர்ச்சி அடைந்தாலும் கண்டுகொள்ள முடியாது. அவற்றை எல்லாம் அந்தப் பேரண்ட உணர்வில் கலந்த ஞானிகளால் மட்டுமே அறுதியிட்டுக் கூறமுடியும்பேரானந்த நிலையில் நிரந்தரமாக நிலைத்திருக்கும் பூரண ஞானிகள் தன்னால் மட்டுமே இதையெல்லாம் சாதிக்கமுடியும். வேறு யாராலும் இவற்றைச் செய்யமுடியாது என்று எண்ணுவதில்லை. குருவிற்கும், சீடனுக்கும் உள்ள உறவு மிகவும் புனிதமானது. இந்த உலகில் நாம் உறவுமுறை சொல்லிக் கொண்டாடிவரும் அனைத்து உறவுகளையும் விட அது மேன்மையானது


                யோகானந்தர் மீண்டும் குருநாதர் ஸ்ரீஸ்ரீ யுக்தேஸ்வரரை வந்து சேருகின்றார். என்னை விட்டுவிட்டு வேறு ஒரு குருவை நாடி ஏன் சென்றாய் என்றோ, எங்கு சென்றாலும்; நீ என்னிடம் தானே திரும்பி வந்தாய் என்றோ அவர்  கேட்கவில்லை. மாறாக பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து தனது சீடருக்கு யோக நிலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.



கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடாக் காட்சி உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே


எனத் தாயுமானவா் கூறும் கருணை ஆறு குருநாதா் என்பதனை அனுபவத்தில் உணா்ந்தார் பரமஹம்சா்

2 comments:

  1. பால் நினைந்தூட்டும் தாயாக உள்ள நம் அன்னைக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்

    ReplyDelete
  2. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete