24 August 2017

Various forms of Guru - கழுகும் காகமும் குருவே!!

கழுகும் காகமும் குருவே!!



                குரு தத்தாத்ரேயர் மலை மீது தனிமையில் அமர்ந்துள்ளார்அவரைக் காண யுத்த களத்திலிருந்து அரசன் வருகின்றான். சலனமில்லாமல் மிகவும் மன நிறைவுடன் தத்தாத்ரேயர் அமர்ந்திருப்பதைப் பார்க்கின்றான் அரசன்இவ்வளவு மன நிறைவுக்கு என்ன காரணம் என்று குருநாதரிடம் வினவுகின்றான் அரசன்.


                தத்தாத்ரேயர் தமக்கு 26 குரு உள்ளதாகக் கூறுகின்றார்அந்த குருவின் உபதேச மொழிகள் என்னைப் பக்குவப்படுத்தின என்றும் கூறினார்அவர்கள் யார் யார் என்று கேட்கும்போது கழுகு, காகம், திருமணத்திற்கு நிற்கும் பெண், சூரியன், சந்திரன் என்று தனது குருநாதர்களை வர்ணிக்கின்றார்


                கழுகு என்ன உபதேசம் செய்தது? என்று வினவிய அரசனிடம் குருநாதர் விளக்குகின்றார்.


கழுகு ஒரு குரு



                வெட்டவெளியில் ஒரு சிறு மாமிசத் துண்டை எடுத்துக்கொண்டு கழுகு பறக்கின்றதுஅப்போது அந்த மாமிசத்தின் மேல் உள்ள ஆசையால் அந்தக் கழுகு பறப்பதற்கு முன்னும் பின்னுமாக காக்கைகள் பறந்துகொண்டே இருந்தனமாமிசத்தைத் தானும் சாப்பிடாமல் பிறருக்கும் கொடுக்க முடியாமல் பறந்த கழுகு ஒரு சூழ்நிலையில் இறைச்சியை கீழே போட்டுவிட்டதுஇப்போது காக்கைகள் இறைச்சியை நோக்கிப் பறந்து சென்றதால் கழுகு மிகவும் இலேசாகிவிட்டது


                எந்தவிதமான இடையூறும் இல்லாமல் வான்வெளியில் பறந்து சென்றதுஇதைப் பார்த்துக்கொண்டே இருந்த எனக்கு சம்சாரம் என்ற பந்தத்தில் அகப்பட்டு ஆண் மாமிசம் பெண் மாமிசத்திற்கும்; பெண் மாமிசம் ஆண் மாமிசத்திற்கும் அலையாமல் இருந்தால் நாம் சுமை நீங்கி விடுதலை பெறலாம் என்று தோன்றியதுசுமை இல்லாததால் கழுகு எப்படி உயரே பறக்க முடிந்ததோ அதுபோல் மனத்தின் சுமை நீங்கிய நான் ஆன்ம அனுபவத்தை நோக்கி மிக எளிதாக உயரே உயரே பறக்க முடிந்தது என்றார் குருநாதர். அமைதியாக உள்ளேன் என்றார் குருநாதர்


காகம் ஒரு குரு



                காகம் உங்களுக்கு எப்படி குருவாக அமைந்தது? என்றான் அரசன்எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தெருவில் அழுகிக் கிடக்கும் மாமிசத் துண்டுகள், பழங்கள் இவற்றை அவை சுத்தம் செய்கின்றன. தனக்கு உணவாகவே அவற்றை  எடுத்துக்கொண்டாலும்கூட யாரிடமிருந்தும் எந்த பாராட்டையும் எதிர்பாராமல் வீதியை சுத்தம் செய்தது காகம். தனக்கு கிடைத்த பொருள் எதுவாக இருந்தாலும், காகம் உறவு கலந்து உண்டது. சுய நலநோக்கம் எதுவும் இல்லாமல், உறவினரோடு கலந்து வாழும் வாழ்க்கைதான் ஒரு மனிதனுக்கு நலம் பயக்கும் என்பதை காகத்திடமிருந்து கற்றுக்கொண்டேன் என்றார் குருநாதர்.


                காகம், தான் உண்டு முடித்த பிறகு மீதம் உள்ள இறையை ஏதேனும் ஒரு வீட்டுக் கூரையில் செருகிவிட்டு பறந்து சென்றுவிடும். மீண்டும் அடையாளம் கண்டுகொண்டு மாலையில் அதே வீட்டுக் கூரையில் வந்து உணவை எடுத்துக்கொள்ளும். இறை உணர்வு பெறும் ஆன்மா மனதிற்குள் இறையாற்றலை மறைத்து வைத்துக்கொண்டு மீண்டும் நேரம் கிடைக்கும்போது, அதே இறை அனுபவத்தை சிந்தனை செய்யவேண்டும் என்பதை காகத்தைப் பார்த்து புரிந்துகொண்டேன்.


மணப்பெண் ஒரு குரு


                இதை அடுத்து திருமணத்திற்கு நிற்கும் மணப்பெண் என்ன உபதேசித்தாள்? என்றான் அரசன்அவள் ஒரு ஏழைப்பெண். அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார்கள் வந்திருந்தனர்அவர்களுக்கு விருந்து செய்து தருவதற்காக மாவை மணப்பெண்ணே இடிக்கவேண்டிய சூழ்நிலைபெண்பார்க்க வரும் நிகழ்ச்சிக்காக கையில் கண்ணாடி வளையல் அணிந்திருந்தாள்மாவு இடிக்கும்போது கண்ணாடி வளையல் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்பிக்கொண்டே இருந்தது. வந்தவர்கள் இந்த ஏழைப்பெண் தன்னைப் பெண் பார்க்க வரும்போதும்கூட, தானே வேலை செய்யும் நிலையில் உள்ளாளே என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக ஓசை எழுப்பும் தனது கண்ணாடி வளையல் அனைத்தையும் கழற்றிவிட்டு ஒரு வளையல் மட்டும் அணிந்துகொண்டாள்.


                தலைவனை அடைய விழையும் மணப்பெண் வளையோசையால் தலைவன் வீட்டினர் தன்னை நிராகரித்துவிடக்கூடாது என்று எண்ணி ஒலி எழுப்பும் பல வளையல்களை கழற்றி வைத்தது போல், ஆன்ம தலைவனை உணர்ந்து தன்னில் தானே சுகம் பெற விழையும் அடியவர் ஆரவாரமற்று தனியாக இருக்கவேண்டும் என்னும் பாடத்தை அந்த பெண் மூலம் கற்றுக்கொண்டதாகக் கூறினார் குருநாதர்.  


சூரியன் ஒரு குரு


                சூரியன் தன்னுடைய வெப்பத்தால் உலகம் முழுவதையும் தூய்மை செய்கின்றான். 10 தினங்கள் அடை மழையோ, புயல்மழையோ பெய்தால் ஊரெல்லாம் கிருமிகள் பெருத்துவிடும்சூரிய வெளிச்சத்தால் மட்டுமே ஒரே நேரத்தில் இப்பூமியை தூய்மை செய்யமுடியும். உலகத்தவரிடமிருந்து அந்த சூரியன் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லைதனது கடமையை யாருடைய கட்டாயத்திற்காகவும் அல்லாமல், தானே மனநிறைவுடன் செய்து வருகின்றதுஇக்காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் நாமும் உலகிற்கு ஏதேனும் ஒரு வகையில் உபயோகம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும்; எந்த பலனையும் உலகத்திடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது என்றும் கற்றுக்கொண்டேன்.


சந்திரன் ஒரு குரு



                சந்திரன் தனது தண் ஒளியால் உலகத்தை குளிர்விக்கின்றான்அல்லி மலர் சந்திரனுடைய ஒளியைக் கண்டு மலர்கின்றது. காதலர்கள் சந்திரனைக் கண்டு மனநிறைவு பெறுகிறார்கள்ஆனால் சந்திரன் இவர்களுக்கெல்லாம் ஒரு சாட்சியாக இருக்கின்றானே தவிர, தன்னால்தான் இவைகள் எல்லாம் நடக்கின்றன என்று ஒருபோதும் நினைப்பதில்லை. அதுபோல், நம் உடலுடனும் உணர்வுடனும் தொடர்புடைய எக்காரியங்கள் நடந்தாலும் அவற்றிற்கு நாம் சாட்சியாக மட்டும் இருக்கவேண்டுமே தவிர, அவற்றிற்கு நாம் பொறுப்பேற்கக் கூடாது என்னும் தெளிவினைப் பெற்றேன் என்றார்


                இப்படி மௌன நிலையிலேயே தற்செயலாக நடந்தவற்றையெல்லாம் தனது  ஞானக்கண் கொண்டு பார்த்ததன் மூலம் சுமை எதுவும் இல்லாத ஒரு ஆனந்த போதத்தில் தத்தாத்ரேயர் இருக்கும் நிலையை நினைத்துப் பார்த்தான் அரசன்



குரு முன்னிலையில் தனது உடல், மனம், உணர்வு,  அனைத்தும் சீவ அவத்தைகளை ஒழித்து, சிவபோதமான அனுபவ நிலையினை அரசன்  உணர்ந்தான்மேலான ஒரு அனுபவ நிலையினை குருவை அடைந்த அளவில்; குருவும், சீடனும் ஒரு மோன மௌன நிலையில் திளைத்தனா்.

2 comments: