9 August 2017

Life Journey - வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கைப் பயணம்


                ஒருமுறை அரசனும்,  அமைச்சனும் அரண்மனையில் நந்தவனத்தில் காற்று வாங்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது அந்த அரண்மனைத் தோட்டத்திற்குள் எம தர்மராஜா வந்தார். அரசனும் அமைச்சனும் எம தர்மனைக் கண்டு பேசினார்கள். சற்று நேரத்தில் எம தர்மன் சென்றுவிட்டார். அமைச்சர் அரசனிடம் தனக்கு பயமாக இருப்பதாகவும், எம தர்மன் தன்னையே உற்று நோக்கியதாகவும் கூறினார்அரசன் அமைச்சரைச் சமாதானம் செய்தான்என்ன செய்தும் அமைச்சர் சமாதானம் ஆகவில்லை. தன்னை மரண பயம் அச்சுறுத்துவதாகவே உணர்ந்தார்.


                அரசன் அமைச்சரிடம் வேறு எங்காவது சென்று தீர்த்த யாத்திரை செய்து தங்கள் மரண பயத்தையும், மன பயத்தையும் நீக்கி வாருங்கள்நான் அதற்காக அரசு ஏற்பாடுகள் செய்து தருகின்றேன் என்று கூறினார். ஏழு தீவுக்கு  அப்பால் உள்ள அரண்மனையில் விருந்தினர் தங்கும் அறையில் ஒரு மாதம் இருந்து வருகின்றேன் என்றார் அமைச்சர். அரசனும் தனது புட்பக விமானத்தில் அமைச்சரை அனுப்பி வைத்தான்.


                அமைச்சர் அன்று மாலையே ஏழு தீவுக்கு அப்பால் உள்ள விருந்தினர் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தார். எமன் எட்ட முடியாத இடத்திற்கு வந்துவி ட்டதாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்;. பதினைந்து தினங்கள் கழித்து அரண்மனை நந்தவனத்தில் அரசன் உலா வந்தான்எமன், அன்று அங்கு வந்தான். அரசன் எமனை வணங்கித் தன் சந்தேகத்தைத் தெளிவு செய்யுமாறு வேண்டினான். பதினைந்து நாட்களுக்கு முன்னால் வந்த தாங்கள் எனது அமைச்சரை உறுத்து நோக்கியதன் காரணம் யாது? என வினவினான்.


       தர்மராஜா தங்களது அமைச்சரின் உயிரை ஏழு தீவுக்கு அப்பால் உள்ள விருந்தினர் அரண்மனையிலிருந்து எடுத்து வரும்படிக் கட்டளை இட்டிருந்தார்ஆனால் உங்களது அமைச்சர் இந்த நந்தவனத்தில் உங்களுடன் உலவிக் கொண்டிருந்தார்நான் தர்மராஜாவிடம் ஏழு தீவுக்கு அப்பால் சில மணிகளில் அவ/ர் எவ்வாறு செல்லமுடியும் எனக் கேட்டேன்ஏன்? எதற்கு?   எப்படி? எவ்வாறு என்பது எல்லாம் தெய்வ ரகசியம். அது பற்றி ஒன்றும் சிந்திக்காமல், ஏழு தீவுக்கு அப்பால் குறிப்பிட்ட மணி அளவில் சென்று பார்க்க வேண்டியது மட்டுமே உனது வேலை என்று பணித்தார்நானும் அவ்வாறே சென்று பார்த்தேன்கடவுளின் திட்டத்தை என்ன என்று சொல்வதுஅவர் கூறியது போலவே தங்கள் அமைச்சர் அன்று இரவு ஏழு தீவுக்கு அப்பால் இருந்தார்.  



                நாம் எப்போது? எங்கே? எப்படி இறக்கவேண்டும் என்பதுவும் இறைவனது திட்டமே. உயிரின் பயணத்தை இறையே அறியும்.  சிந்திப்போம்! செயல்படுவோம்!!

No comments:

Post a Comment