11 August 2017

How invaluable Human birth is - எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும்

எற்றைக்கும்,  ஏழேழ் பிறவிக்கும்

                குருவிற்கும், சீடனுக்கும் உள்ள பந்தம் கடல் கடந்ததுமலை கடந்ததுஆகாயம் கடந்தது மட்டுமல்லஅது பிறவியும் கடந்தது என்பதை அருளாளர்கள் வரலாறு மூலம் நாம் அறிந்து கொள்கின்றோம்சீரடி சாய்பாபாவைத் தேடி ஒரு தொண்டர் வந்தார்அவர் பாபாவைத் தனது விருந்தாளியாகத் தங்கி ஒரு வேளை உணவு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டினார். பாபாவும் தொண்டரது அன்புக்கு இரங்கி அவரது வீட்டிற்கு வருவதற்குச் சம்மதித்தார்.


                குருநாதரும் சீடரும் ஒரு வயல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தனர்அப்போது சற்று தொலைவில் ஒரு தவளை பரிதாபமாகக் கத்தியதுஏதோ சத்தம் கேட்கின்றதே என்று தொண்டன் கேட்டான்;. அது வேறொன்றுமில்லை. பாம்பு ஒன்று தவளையைப் பிடித்துக் கொண்டிருக்கின்றதுபாம்பின் வாயில் புகுந்த தவளை உள்ளும் செல்லாமல், வெளியும் வராமல் கத்துகின்றது என்றார் சாய்ராம்.


                பழைய தீவினையின் கசப்பான அனுபவத்தினை அத் தவளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது என்றார் சாய்ராம். சுவாமி எனக்கு அதன் உண்மையைக் கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் சீடன். சாய்ராம் அந்தப் பாம்புக் கதையையும், அதனுடன் தொடர்புடைய தவளைக் கதையையும் தனது சீடனிடம் விளக்கினார்


                ‘தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்என்றாற்போல் அவரவர் நல்வினையும், தீவினையும் அவரவர் சம்பாதித்துக் கொள்வதே என்றார். கடந்த பல பிறவிகளிலும் இவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தார்கள். கிடைத்தற்கரிய மானிடப் பிறவி கிடைத்தும்,இப்பிறவி தப்பினால் வேறு எப்பிறவி வாய்க்குமோஎன்னும் தர்ம நெறி தெரியாததால் இப்பிறவியில் பாம்பும் தவளையுமாகப் பிறந்துள்ளார்கள் என்று கூறினார் குருநாதர்.



                இவர்களது முன்பிறவியின் கதையினை அறியவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தான் சீடன்சுவாமி இவர்கள் செய்த பிழை யாது? இவர்கள் இருவரும் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல், துன்புறுகிறார்களே என்ன காரணம்? என்று கேட்டான்.


                குருவும் சீடனும், பாம்பும் தவளையும் இருக்கும் இடம் சென்றனர். ‘ வீரபத்ரப்பா உனது பகைவன் தவளையாகப் பிறந்த பிறகும் தனது செயலை நினைத்து வருந்தவில்லையேநீயும் பாம்பாகப் பிறந்த பிறகும் உனது கொடிய பாவச் செயல்களை நினைத்து வருத்தமடையவில்லையேஇன்னும் எத்தனை பிறவிகளில் இந்தப் பாவச் செயல்களையும், குரோதச் செயல்களையும் தொடரப் போகின்றீர்கள்என்றார் சாய்ராம்உடனே பாம்பு தன் வாயிலிருந்து தவளையை விட்டுவிட்டதுதவளை வளைக்குள் சென்று மறைந்து கொண்டதுபாம்பும் புற்றுக்குள் சென்று மறைந்துவிட்டது.


                ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ ‘குருதேவா உங்கள் குரலைக் கேட்டு பாம்பும் தவளையும் ஒன்றைவிட்டு ஒன்று போய்விட்டது என்ன காரணம்?’ என்று கேட்டான் சீடன்.

                சாய்ராம், பாம்பு தவளையின் பூர்வ ஜென்மக் கதையைத் தனது சீடனிடம் கூறுகின்றார்சாய்ராம் வசிக்கும் இடத்திற்குச் சற்று தொலைவில் சிவன் கோவில் ஒன்று இருந்ததுமிகப் பழமையான திருக்கோவில். அக்கோவில் வழிபாட்டில் ஈடுபட்ட தொண்டர்கள் அக்கோவிலை புதுக்கிக் குடமுழக்குச் செய்யவேண்டும் என்று விரும்பினர்அதனால் ஊர் கூடி ஒரு அமைப்பு ஏற்படுத்தினர்.


                தலைவராக அவ்வூரில் உள்ள ஒரு செல்வந்தனை நியமனம் செய்தனர். செல்வந்தன் பணத்திற்கு ஆசைப் படமாட்டான் என்று ஊர் பொது மக்கள் நினைத்தனர். ஆனால் நடந்தது வேறு விதமாக இருந்தது. ஒரு பெரிய தொகையை ஊர்ப் பெரியவர்கள் கொண்டுவந்து கொடுத்தவுடன் அதை முழுமையாகக் கோவில் திருப்பணிக்குச் செலவிட வேண்டும் என்னும் எண்ணம் செல்வந்தனுக்கு இல்லாமல் போய்விட்டது. மாறாகத் தானே பொதுப்பணத்தை அனுபவித்துக் கொள்ளவேண்டும் என்றும் நினைத்தான்.


                கோவில் வேலைகளை மெதுவாகச் செய்தான். வேகமாகக் கோவில் கட்டுங்கள் என்று கூறினால் பொருளாதாரம் இல்லை வசூல் ஆன பொருட்கள் செலவாகிவிட்டது என்பான்ஊர்மக்கள் மீண்டும் மீண்டும் வசூல்செய்து வந்து கொடுத்தனர். ஆனாலும் செல்வந்தன் கோவில் பணியை முழுமையாகச் செய்யவும் இல்லைபொதுப் பணத்தையும் அபகரித்த வண்ணமாகவே இருந்தான்.


                ஒருநாள் மகாதேவர் செல்வந்தன் மனைவியின் கனவில் சென்று , கோயில் திருப்பணியை உனது சொந்தச் செலவில் செய்து வா உனக்கு வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றார்தான் கண்ட கனவைக் கணவனிடம் கூறினாள் செல்வந்தரின் மனைவிமனத்தின் குழப்பங்கள்தான் கனவாக வருகின்றது. அதனால் கனவைப் பற்றிக் கவலைப்படாமல் நிம்மதியாக இரு என்றான் செல்வந்தன்.


                ஊர்மக்கள் நிதி திரட்டித் தருவதும், செல்வந்தன் அதை அபகரித்துக் கொள்வதுமாகவே இருந்ததுகோவில் திருப்பணி முடிந்தபாடில்லைமகாதேவர் மீண்டும் செல்வந்தன் மனைவியின் கனவில் தோன்றி, நீ கோவில் திருப்பணியை உனது சொந்தச் செலவில் முடித்துக்கொடு என்றார்இம்முறை செல்வந்தனின் மனைவி தனது தாய் வீட்டில் கொடுத்த சீர் வரிசைகளை விற்று கோவில் திருப்பணி செய்யப் போவதாகக் கூறினாள்.


                செல்வந்தன் தானே அப் பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஆயிரம் பொற்காசுகள் என்று விலை நிர்ணயம் செய்து, அதற்குப் பதிலாக கோவிலிற்கு ஒரு நிலத்தை எழுதி வைத்துவிடலாம் என்று கூறினான்தன்னிடம் ஒரு ஏழைப் பெண் துபகி என்பவள் அடமானமாக வைத்த தரிசு நிலத்தைக் கோவிலிற்கு என்று எழுதி வைத்துவிட்டான். கோவில் நிலம் கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. கால வெள்ளத்தில் செல்வந்தனின் வீட்டில் இடிதாக்கி அவனும் அவன் மனைவியும் இறந்துவிட்டனர்


                துபகியும் தனது நிலத்தை கோவிலிற்கு எழுதி வைத்த செல்வந்தன் மீது தீராப்பகை கொண்டு அவளும் இறந்துவிட்டாள். மறுபிறவியில் பணக்காரக் கஞ்சன் மதுராவில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தான்வீரபத்ரப்பா என்று அழைக்கப்பட்டு வளர்ந்து வருகின்றான். அவனது மனைவி கோவில் பூசாரியின் மகளாக கௌரி என்னும் பெயரில் பிறந்து வளர்கின்றாள்துபகி என்னும் பெண் சென்னபசவப்பா என்னும் ஆணாகப் பிறந்து வளர்ந்து வருகின்றாள்கோவில் பூசாரியும் அவர் மகள் கௌரியும் சாய்நாதனின் திருவடியில் மிகுந்த அன்பு பூண்டு தொண்டுசெய்து வந்தனர்.


                மதுராவில் பிறந்த வீரபத்ரப்பா மீண்டும் சீரடி வந்து சேர்ந்தான்பூசாரி மகள் கௌரியையே அவனுக்கு மணமுடித்து வைத்தனர்கோவிலிற்கு எழுதி வைத்த நிலம் வீட்டுமனைக்குப் பல லட்சம் விலைக்கு விற்கப்பட்டதுகௌரியே அந்த சொத்துக்கு வாரிசானாள்கடந்த பிறவியில் அவள் நகையைக் கழற்றிக் கொடுத்த நிலத்திற்கு இப்பிறவியில் அவளே வாரிசானாள்.
                கோவில் சொத்தில் கௌரிக்கு மட்டுமே உரிமை என்றும்; அதில் தலையிடுவதற்கு வேறு யாருக்கும் உரிமை   இல்லை என்றும் ஊர் மக்கள் கூடி முடிவு செய்தனர்வீரபத்ரப்பாவிற்கு கடந்த பிறவியின் தாக்கம் இன்னும் தொடர்ந்ததுகௌரியையும், அவளது குருவான சாய்நாதனையும் வீரபத்ரப்பா திட்டினான்இறைவனின் திட்டத்தை எண்ணி குருநாதர் மௌனமாக இருந்தார்கௌரி தனது கணவன் பேசும் வசைமொழிகளைப் பொறுத்து மன்னிக்கும்படி சாய்நாதனிடம் வேண்டிக்கொண்டாள்.


                மகாதேவர் கௌரியின் கனவில் தோன்றி முழுப்பணத்தையும் கோவில் திருப்பணிக்கும் உனது வாழ்க்கைக்கும் செலவு செய்துகொள். குருநாதரான சாய்நாதரிடம் முழுப் பொறுப்பையும் விட்டுவிடுஅவர் உனக்கு வேண்டியதைச் செய்வார் என்ற கூறி மறைந்தார்துபகியின் சொத்தைத்தான் கௌரியின் கணவர் கடந்த பிறவியில் கோவிலிற்கு எழுதிக் கொடுத்தார் என்பதால் இப்பிறவியில் சென்னபசவப்பாவாகப் பிறந்துள்ள துபகிக்கும் சிறிது பணம் கொடுக்கும்படியாகக் குரு நாதர் வழிநடத்தினார்.


                ஒருநாள் சென்னபசவப்பாவும், வீரபத்ரப்பாவும் பழைய பகைமை உணர்வு தொடர்ந்துவர இப்பிறவியிலும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்இந்தப் பகைமை மீண்டும் மீண்டும் அவர்களின் குரோத பாவத்தை வளர்த்ததுஒருநாள் சென்னபசவப்பாவை கண்ட துண்டமாக வெட்டிவிடுவதாக மிரட்டினான் வீரபத்ரப்பாசென்னபசவப்பா சாய்ராம் காலில் விழுந்து எப்படியாவது வீரபத்ரப்பாவிடமிருந்து என்னைக் காப்பாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்இருவருமே ஒருவர் மீதுள்ள பகையை ஒருவர் மறக்கவில்லைமன்னிக்கவுமில்லைசிறிது காலம் கழித்து கிடைத்தற்கரிய மானிடப்பிறவி கிடைத்தும் அதைச் சரியான வகையில் பயன்படுத்தத் தெரியாத சென்னபசவப்பாவும் வீரபத்திரப்பாவும் இறந்துபட்டனர்.


                ‘அரிது அரிது மானிடராதல் அரிதுஎன்று கிடைத்தற்கரிய பிறவியிலிருந்து விடுதலை பெறும்போது, மேலான உயரிய பிறவியை எடுக்காவிட்டாலும், கீழான பதவியையாவது எடுக்காமல் இருக்கலாம்.


                ‘வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’  என்று வாய்த்த பிறவியை மதிக்கத் தெரியாமல் பாம்பாகவும், தவளையாகவும் பிறந்துவிட்டனர். வீரபத்ராப்பாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கடந்த பிறவியிலேயே சென்னபசவப்பா சரண் அடைந்திருந்ததால், உரியநேரத்தில் வந்து காப்பாற்றினேன் என்றார் குருநாதர்.

                குரு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தும், அவரைச் சரணடையாமல் காம, குரோதத்தை விடாமல் பற்றிக்கொண்டோமானால், நம் ஆன்மீகப் பயணம் வெற்றி பெறாமல் நம்மை கீழான நிலைக்கு தள்ளிவிடும். குரு வாழ்ந்தபோது அவர் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்டு அவரைச் சரணடையத் தெரிந்து கொண்டோமானால், நமது ஆன்மப் பயணம் வளர்ச்சி பெற்றதாகி பிறவி நீக்கத்திற்கான வழியையும் ஏற்படுத்தித் தரும்.



                குருநாதர் சந்நிதியிலும் போய் நின்றுகொண்டு ஆரவாரமும்,  கூச்சலும், குழப்பமும் செய்தால் நமக்கு இப்படியான ஒரு பிறவியும், சூழலும்தான் அமையும் என்பதையும், எவ்வளவுதான் கொடிய செயல்கள் செய்தாலும் குருவானவர் நம்மைக் காப்பதாக வாக்குக் கொடுத்தால் அவர் எந்தச் சூழ்நிலையிலும் வந்து காத்துக் கொள்வார் என்பதனை இவ் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

1 comment:

  1. Amma this message is for us only.few year back I had Anger over few people where I failed to forgive them.now this is a eye opening like.i don't want to suffer like snake and frog rather forgive them and utilise his valuable human birth.thiruvadi potri amma.
    Abirami

    ReplyDelete