15 August 2017

Killing of lust - எரிபடும் காமம்

எரிபடும் காமம்

கந்தபுராணத்தில் சூரபன்மன் என்னும் அசுரன் கதை பேசப்படுகின்றதுநிறைய தவம் செய்தான்தவத்தின் பயன் அன்போடு உருகி அகம் குழைதலாகும்.  ஆனால் சூரன் பிற உயிர்களை வெல்வதிலும், பிறருக்குத் துன்பம் செய்வதிலும் தனது தவத்தை வீண் செய்தான். சூரனை வதம் செய்வதற்கு அனைவரும் சிவபெருமானைத் துதித்தார்கள். சிவபெருமான் மோனத் தவத்தில் ஆழ்ந்து இருந்தார்சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்து முருகக் கடவுள் திரு அவதாரம் செய்து பிறகு சூரன் வதம் நடைபெறவேண்டும்.


                காமனாகிய மன்மதனை அழைத்து சிவபெருமானின் தவத்தைக் கலைக்கும்படி தேவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். சிவபெருமான் காமத்தை வென்றவன். காமம் அணுக முடியாத எல்லையில் உள்ளவன் என்பதால் அவனுக்குக் காமகோடி என்றுபெயர். அதனால் மன்மதன் அம்புகள் சிவபெருமானை எதுவும் செய்ய முடியவில்லைஅதற்கு நேர்மாறாக சிவபெருமான் கண்ணைத் திறந்து, தன்மேல் மலர் அம்பு இட்ட காமனைப் பார்க்கின்றார். காமன் எரிந்துவிட்டான்


தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்னும் எண்ணம் உலக மக்களுக்குத் தோன்றவேண்டும். அப்போதுதான் அவர்கள் தவறு செய்ய அச்சப்படுவார்கள்தர்மத்தில் பற்று இல்லாவிட்டாலும் நம்மை இறைவன் தண்டிப்பான் என்ற அச்சம் காரணமாகத் தவறு செய்வதற்கு அச்சப்படுவார்கள் சாதாரண மக்கள்அதனால் இறைவன் தனது நெற்றிக்கண்ணால் தண்டித்தான்


                 காமகோடியாகிய தன்மீது அம்புபட்டால் தன்னைக் காமன் கணை ஒன்றும் செய்யாதுஆனால் சாதாரண உயிர்களின் இயல்பு என்ன! காமனது உடம்பு எரிக்கப்பட்டால் காமனது ஆற்றல் குறையும் என நினைத்து காமனை அனங்கன் ஆக்கினார் சிவபெருமான். அங்கன் என்றால் பூரண வடிவுடையவன். அனங்கன் என்றால் வடிவு (உருவம்) இல்லாதவன்அனங்கனாக இருந்து அவன் செய்யும் செயலே இந்த அளவு விபரீத பலனைத் தருமானால் அங்கத்தோடு கூடினால் அவன் எந்த அளவு விபரீத பலனை உயிர்களுக்கு விளைவிப்பான்அதனால்தான் சிவபெருமான் காமனை எரித்தார்.


                “காமனையும் கண் அழலால் காய்ந்தான் கண்டாய்
                                                                                                                     (அப்பர் சுவாமிகள்


                காமன் எரிந்தபிறகு பார்வதி, பரமேஸ்வரன் திருமணம் நடக்கிறது. காமன் உடல் எரிந்ததால், இரதி மிகவும் வருந்தினாள்தன் கணவன் உடலை மீட்டுத் தருமாறு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தாள்உமா தேவியுடன் தங்களது திருமணம் நடக்கின்றது. அத் திருமணத்தில் செய்யப்படும் பல வகைத் தானங்களில் ஒன்றாக, எரியுண்ட மன்மதனை எழுப்பித் தரவேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றாள் இரதி. சிவபெருமானும், பார்வதியும் ஒரு நிபந்தனையுடன் மன்மதனை மீட்டித் தந்தார்கள்;. அதாவது, உனக்கு மட்டும் மன்மதன் காட்சி கொடுப்பான்மற்றவருக்கு அதாவது உலகத்தவருக்கு மன்மதன் உருவமற்றவனாகவே தெரிவான் என்று வரம் கொடுத்தார்கள்

தன்முனைப்பு காரணமாகவும், ஆணவம் காரணமாகவும் ஓர் உயிர் தவறு செய்யும்போது, அவ்வுயிர்கள்பால் மறக்கருணை செய்கிறான் ஈசன்அதே உயிர் தன் தவறினை உணரும்போது அதனை ஏற்று அருள்புரிகின்றான் இறைவன். காமதகனம் செய்தபோது உலகத்து உயிர்கள் அனைத்தும் மோனத் தவம் இயற்றின. இரதி இறைவனிடம் தனது கணவனை மீட்டுத்தரும்படியாக வேண்டினாள். இறைவனும் அதனை ஏற்று மன்மதனை உயிர்ப்பித்தார்.


                தேவர் உலகிலும், பூவுலகிலும் வாழும் உயிர்கள் அனங்கன் உயிர்பெற்றதும் செயல்பட்டதுமன்மதன் எரிந்ததும் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சலனமற்றிருந்த உயிர்க்கூட்டங்கள் தம் தம் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பின.


அங்கு அவன் அருளின் நீர்மை யார் அறிந்து உரைக்கற்பாலார்என்று இறைவனுடைய அருள்திறத்தை வியக்கின்றார்கள் இறைஅடியவர்கள்.


காமமும், காதலும் உயிர்களுக்குத் தேவை.  அவை நெறியானதாக இருக்கவேண்டும் என்பதே அருளாளா்கள் கண்ட நெறி.  அதனால் நெறியான காதல் செய்து நெறியாக வாழ்வோம்.


1 comment:

  1. இயல்பாக நெறி பிறழாமல் வாழ ,எளிய முறையில் விளக்கி உள்ளதற்கு மிக்க நன்றி அம்மா

    ReplyDelete