6 September 2017

Guru and Disciple -அசையாத சீடனும் அருட்குருவும்

அசையாத சீடனும் அருட்குருவும்


சதாசிவப்
ப்ரமேந்திரர் இடைவிடாது வேதம், சாத்திரம் என்று எதையாவது யாருக்காவது உபதேசித்துக் கொண்டிருப்பார். தனது சீடன் மோன நிலையின் அனுபவத்தை உணரவேண்டும் என்று அவரது குருநாதர் பரமேஸ்வர ப்ரமேந்திரர் விரும்பினார். ஒருநாள் குருநாதர் ,  “சதாசிவம் சற்று அமைதியாக வாய்மூடி இரு” என்றார்சதாசிவப் பரமேந்திரருக்கு அவ்வொரு மொழியே  குருமொழி ஆயிற்று.



பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
                                  பணிகின்றேன் பதியே நினைக்
 கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
                                  குழைகின்றேன் குறித்த ஊனை
 ஊட்டுவித்தால் உண்ணுகின்றேன் உறங்குவித்தால்
                                  உறங்குகின்றேன் உறங்காது என்றும்
 ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ
 இச்சிறியேனால் ஆவது என்னே”                                                                                                                                                                                                                                                                                                                                                                                                (அருட்பா)


                குருநாதர் ஆட்டுவிக்கின்றார். நாம் ஆடுகின்றோம் என்று நினைத்தார்அப்படியே மௌன நிலையில் ஆடாது அசையாது நின்றுவிட்டார். குருநாதர் மடத்து வேலைகளில் ஈடுபட்டிருந்தார்சீடன் ஆடாமல் அசையாமல் தன் நிலையில் அப்படியே மௌனமாக ஆகிவிட்டார். மடத்தில் உள்ள மற்றச் சிப்பந்திகள் குருநாதரிடம் சதாசிவம் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றார் என்று கூறினார்கள்குருதேவர் வந்து பார்த்தார்சீடன் அடைந்துள்ளது மிகப்பெரிய மோனநிலை.


                ‘தானான தன் மயமான நிலை’  இதில் வேறு எந்த இடையீடும் இருக்கக் கூடாது என்று தானே முன் வந்து சீடனுக்குத் தொண்டு செய்கின்றார். மற்றைய மடத்துச் சிப்பந்திகளிடம் குருநாதர் கூறுகிறார். இந்த ஒப்பற்ற மோனநிலை வேண்டி கல்ப கோடிகாலம்புற்றுமாய் மரமாய் புனல்காலே உண்டியாய் அண்டவானரும் பிறரும் வற்றியாரும் நின் மலரடி காணாஎன்று நிற்கிறார்கள் தேவர்கள். எனது சீடனுக்கு இந்த நிலை அனுபவத்தில் வந்துவிட்டதேநான் மட்டும் இந்த மடத்து வரவு செலவுகளைக் கவனிக்கும் கணக்குப்பிள்ளை ஆகிவிட்டதற்கு மடாதிபதி என்னும் பெயர் வேறாஇந்த வரவு செலவுகளை ஒரு கணக்குப்பிள்ளை கவனித்து விடுவானே அதற்கு நான் எதற்கு? சீடன் அடைந்த ஞான அனுபவத்தை தாம் அடையவில்லையே என்கின்றார்.



                என்னால்தான் எனது சீடன் இதைப்பெற்றான் என்று நினைக்கவில்லைதான் இந்த அனுபவத்தைப் பெற்று, உலக சேவைக்காக அதையும் துறந்து தொண்டு செய்து கொண்டிருப்பதாகவும் கூறவில்லை. எப்போதாவது யோகநிலை பூர்த்தி அடைந்த ஆன்மாக்களுக்கு மட்டுமே கைவரக்கூடிய மிகப்பெரிய அனுபவநிலையை இறைவன் என்பொருட்டு; இன்னும் கருணை செய்யவில்லையே என்று கூறினார்சீடர் கூறினார், எனது ஒவ்வொரு அசைவும் மூச்சும் பேச்சும் எனது குருவால்தான் நடந்து வருகிறது என்று கூறினார்எப்படிப்பட்ட குரு சீடர் பரம்பரை, நமது குரு சீடர் பரம்பரை

No comments:

Post a Comment