14 November 2017

Do we enjoy all our possession - Second part வகுத்தான் வகுத்த வகை அல்லால் - இரண்டாம் பகுதி

வகுத்தான் வகுத்த வகை அல்லால் - இரண்டாம் பகுதி


1.     பொருத்தங்களில் எல்லாம் பெரிய பொருத்தம் மனப் பொருத்தம் என்கிறார்கள். தங்களது திருமணத்தைத் தாங்களே நிர்ணயம் செய்து கொள்ள இயலும் என்கிறார்கள்.10 ஆண்டு காதலிக்கின்றார்கள்  இரண்டு வருடத்தில் முறிவு செய்து விட்டார்களே! அன்பு செய்தது மனத்தையா? உடலையா? அன்பின் ஆழமும், அழுத்தமும் எந்த அளவு ஊனில் ஊடுவியிருந்தது, மனதில் ஊடுருவியிருந்தது. தொகுத்தார்க்கும் துய்த்தல்அரிது.

லட்சக்கணக்கான
நகையும் ,தொகையும் துய்ப்பதற்கும், மன அமைதியுடன் வாழ்வதற்கும் தொகுத்து வைத்து வர வேண்டும. பணம் படைத்தவன் மனநிறைவோடு வாழ்கிறானா? என்பதனைஅவன் தொகுத்து வந்த ஊழ் மட்டுமே நிர்ணயிக்க முடியும்
   நாம் இந்த நிலம் வாங்கினோம். இதிலிருந்து பல ஆண்டு காலம்வாழ்வோம் என்று ,மனம் கற்பனை செய்யும் .வீடு கட்டி பால் காய்ச்சும் அன்று மின்சாரம் தாக்கி குடும்பமே பலி என்று பார்க்கிறோம்.நாம் தொகுத்து வந்த விதிக்குத் தகுந்தவாறு இறைவன் நமது வாழ்வை அமைத்துக் கொடுக்கின்றான்.அவன் வகுத்த வழியில் நாம் நம் விதியின் வண்ணம் அனுபவிக்க முடியுமே தவிர நாமாக முயன்று எதனையும் செய்ய இயலாது.

"
தீதும் நன்றும்பிறர் தர வாரா"-சங்கப்பாடல்

"for every action there is an equal & opposite reaction" .


மிக
எளிதாக வள்ளுவர், வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்றார்.

"ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியு மல்ல பிற"-குறள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இக்குறளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MLA அமைச்சராகத் தேர்வு செய்யப்படுகிறார்.நட்பு சுற்றத்திடம் தனது மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதற்கு வரும் வழியில் விபத்தில் உயிர் துறக்கின்றார்.கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தான்ஒரு பதவியைப் பிடித்து விட்டோம் என்று அவரதுகற்பனை சிறகடித்துப் பறந்த ,நீள, அகலம் என்ன ? அவருக்கு ஏற்பட்ட முடிவு என்ன ? இறைவன் ஒருவனுக்கு மட்டுமே முற்றுணர்தல் என்னும் பண்பு உண்டு .செத்துப் பிறக்கும் மனிதனுக்கு , அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கூற முடியாது .ஆனால் தம் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய போகங்களைப் பற்றி எண்ணற்ற கற்பனைகளைக் கொண்டிருப்பர். அடுத்த கணப் பொழுது நாம் வாழ வேண்டும் என்பது இறைவிதித்திருந்தால் மட்டுமே அதனைத் துய்த்து அனுபவிப்பது நமக்கு சாத்தியமானதாக இருக்கும்



.

No comments:

Post a Comment